சேலம் அரசு மருத்துவமனை அவலம் தொடர்கிறது
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்களின் தவறான சிகிச்சையால் 2 வயதுக் குழந்தையின் வலது கை அழுகிவிட்டது. கையை எடுத்தால் தான் அந்த குழந்தை பிழைக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வருவோர் படும் அவலங்கள் தொடர்ந்து வருகின்றன.
சமீபத்தில் தான் கர்ப்பிணி, சிறுமி உள்ளிட்ட சிலர் அடுத்தடுத்து இறந்ததைத் தொடர்ந்து ஒரு டாக்டர் உள்பட 13பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால் டாக்டர்கள் சங்கம் விடுத்த வேலைநிறுத்த மிரட்டலைத் தொடர்ந்துஇந்த சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் சேலம் அருகே உள்ள சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் தனது 8 மாதக் குழந்தைக்குவயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தார்.
அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் குழந்தையின் வலதுகை திடீரென்று நீல நிறமாக மாறி,அழுக ஆரம்பித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பாபு டாக்டர்களிடம் கேட்டபோது, "நீ உன் வேலையைப் பார், நாங்கள் எங்களதுவேலையைப் பார்க்கிறோம்" என்று தாறுமாறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் குழந்தையின் வலது கையை எடுத்தால் தான் அது உயிர் பிழைக்கும் என்ற நிலை ஏற்பட்டது.
இதையடுத்து பாபுவின் உறவினர்கள் மருத்துவமனையிலேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல்அறிந்ததும் கலெக்டர் ராதாகிருஷ்ணன் விரைந்து வந்து பாபுவையும், அவரது உறவினர்களையும்சமாதானப்படுத்தினார்.
அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியப் போக்கினால் அந்தப் பக்கம் போவதற்கே நோயாளிகள் யோசிக்கஆரம்பித்துள்ளனர். ஆனாலும் ஏழை நோயாளிகளுக்க வேறு என்ன தான் வழி?
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications