இனி போர் வராது: புலிகள், இலங்கை அரசு உறுதி
ஓஸ்லோ (நார்வே):
இலங்கையில் இனிமேல் போர் எதுவும் வராது என்று ஓஸ்லோவில நடைபெற்ற நிதி திரட்டும் மாநாட்டில்விடுதலைப்புலிகளும் இலங்கை அரசும் உறுதி அளித்தனர்.
வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர் பகுதிகளில் சீரமைப்பு பணிகளுக்கானநிதி திரட்டும் மாநாடு நார்வேயின் தலைநகரான ஓஸ்லோவில் நடைபெற்றது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால், அவைமிகுந்த சிரமங்களுக்கிடையில் தான் இந்த மாநாட்டில் வந்து கலந்து கொண்டன.
இருந்தாலும் அந்த நாடுகள் புலிகளையும் இலங்கை அரசையும் அறிவுறுத்துவதற்குத் தயங்கவில்லை.இலங்கையில் முழு அமைதி திரும்ப இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஒத்துழைக்க வேண்டும் என்றுஅமெரிக்காவும் இங்கிலாந்தும் கேட்டுக் கொண்டன.
மாநாட்டில் பேசிய விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம், இலங்கைத்தமிழர்களுக்கு முழு பாதுகாப்பும், அனைத்து உரிமைகளும் கிடைக்குமானால் போர் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்று கூறினார்.
இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் இதே தொணியில் தான் பேசினார். அடுத்த ஆண்டுக்குள் இலங்கைஇனப் பிரச்சனை முழுவதுமாக ஒடுக்கப்பட்டு விடும் என்றார் அவர்.
இதற்கிடையே அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 39 நாடுகள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு, சுமார் ரூ.350 கோடிக்கான நிதி உதவியை வடக்கு, கிழக்கு இலங்கையின் சீரமைப்புப் பணிகளுக்குத்தருவதாக அறிவித்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications