சென்னை சுவர்களில் இனி போஸ்டர் ஒட்ட தடை
சென்னை:
வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் சென்னையின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள சுவர்களில் போஸ்டர்கள்ஒட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியும், மாநகர போலீசாரும் இணைந்து இந்தநடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதுமே போஸ்டர் ஒட்டும் கலாச்சாரம் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
குட்டிச் சுவரைக் கூட விட்டு வைக்காமல் அதிலும் போஸ்டர் ஒட்டி வருகிறார்கள். சிறிது நேரம் அசையாமல்நின்றால் நம் மீது போஸ்டர் ஒட்டிவிடும் நிலை உள்ளது.
சினிமா போஸ்டர்கள், அரசியல் போஸ்டர்கள் தவிர பிறந்த நாள், இறந்த நாள், காது குத்து, சடங்கு, திருமணம்என்று சகலத்துக்கும் போஸ்டர் ஒட்டப்படுகிறது.
இந்த ரக போஸ்டர்கள் மதுரையில் தான் மிகவும் பிரபலம் என்றாலும், சென்னையிலும் போஸ்டர்களுக்குக்குறைவில்லை. ஆனால் இங்கு சினிமா மற்றும் அரசியல் போஸ்டர்கள் தான் அதிகம்.
இதனால் நகரின் அழகு பாதிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை இப்போது தான் சென்னை மாநகராட்சி உணரத்தொடங்கியுள்ளது.
சென்னையில் கண்ட இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று நினைத்த சென்னைமாநகராட்சி, போலீசாரின் உதவியை நாடியுள்ளது.
இதையடுத்து இரு தரப்பினரும் கூடி ஆலோசித்து சில முடிவுகளை எடுத்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் சினிமாதியேட்டர் அதிபர்கள் மற்றும் சில அரசியல்வாதிகளும் கூட கலந்து கொண்டனர்.
தியேட்டர் அதிபர்கள் கூட சென்னை மாநகராட்சியின் இந்த யோசனையை ஏற்றுக் கொண்டனர். இருந்தாலும்சினிமா போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதன்படி இனி சென்னையில் பொது இடங்களில் உள்ள சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டுவதற்கு மாநகரப்போலீசார் தடை விதித்துள்ளனர். போஸ்டர் அடித்து ஒட்டும் நபர்களையும் அழைத்து போலீசார்அறிவுறுத்தியுள்ளனர்.
முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி கட்டடமான ரிப்பன் பில்டிங்கிலிருந்து ஈ.வே.ரா. சாலை முடியும் வரை உள்ளபகுதிகளில் உள்ள சுவர்களில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் போஸ்டர்கள் ஒட்டுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இங்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்தில் சினிமா மற்றும் போஸ்டர்களை ஒட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்படும்என்றும், அதில் மட்டும் தான் போஸ்டர்களை ஒட்ட வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அந்தக் குறிப்பிட்ட இடத்தைத் தவிர வேறு எங்கு போஸ்டர் ஒட்டினாலும், அதில் தொடர்புடையவர்கள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த முதற்கட்ட நடவடிக்கை வெற்றி பெற்றால் இத்திட்டம் சென்னையின் மற்ற பகுதிகளுக்கும்விரிவுபடுத்தப்படும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications