அல் உம்மா- நக்சல்கள் தொடர்பு?
தருமபுரி:
தருமபுரியில் கைதான நக்சலைட்டுகளுக்கும் அல்-உம்மா தீவிரவாதிகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதுதெரியவந்துள்ளதையடுத்து தமிழக போலீசார் அதிர்ச்சியில் ஆழ்ந்து போயுள்ளனர்.
இந்த நக்சலைட்டுகள் அனைவரும் "புரட்சிகர இளைஞர் கழகம்" என்ற பெயரில் தான் செயல்பட்டு வந்தனர் என்றவிவரமும் தெரிய வந்துள்ளது.
தருமபுரி அருகே காட்டுப் பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக நடந்து வரும் வேட்டையில் சிவா (அ)பார்த்திபன் என்ற நக்சலைட் கொல்லப்பட்டார். மேலும் ஐந்து பெண்கள் உள்ளிட்ட 25 நக்சலைட்டுகள் கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் சிவாவின் உடல் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட பின்னர் அவருடைய சகோதரரிடம்ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் சிவாவின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தருமபுரி நகராட்சி மயானத்தில் நேற்று மாலை அடக்கம்செய்யப்பட்டது.
சிவாவின் குடும்பத்தினரைத் தவிர சில பேர் மட்டுமே அப்போத மயானத்திற்கு வந்திருந்தனர். அவர்களைப்போலீசார் தீவிரமாகக் கண்காணித்தனர்.
இதற்கிடையே காட்டுக்குள் ஒளிந்திருப்பதாகக் கருதப்படும் மேலும் பல நக்சலைட்டுகளைத் தேடும் பணியும்நடந்து வருகிறது.
இந்நிலையில் அறிவொளி என்ற நக்சலைட் இன்று சேலத்தில் கைது செய்யப்பட்டார். அவர் பின்னர்விசாரணைக்காக தருமபுரி போலீசாரிடம் அனுப்பிவைக்கப்பட்டார்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட நக்சல்களின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது.
அல்-உம்மாவுடன் தொடர்பு?
பிடிபட்ட நக்சலைட்டுகளிடம் க்யூ பிராஞ்ச் போலீசாரும் உளவுப் பிரிவினரும் நடத்திய விசாரணையின்போதுஅல்-உம்மா இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் இவர்களுக்குத் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பி, பல மாதங்களாகத் தலைமறைவாக இருந்து பின்னர்பெங்களூரில் தமிழகப் போலீசாராலேயே சுட்டுக் கொல்லப்பட்ட இமாம் அலி உள்ளிட்டவர்கள் அல்-உம்மாதீவிரவாதிகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்-உம்மா தீவிரவாதிகளும் தமிழகத்தில் மிகப் பெரும் தாக்குதல்களை நடத்த இருந்தனர் என்பதும் இமாம் அலிகொல்லப்பட்ட போது தெரிய வந்தது.
இப்போது பிடிபட்டு வரும் நக்சலைட்டுகளுக்கும் ஆந்திராவின் மக்கள் போர்க் குழுவைச் சேர்ந்தநக்சலைட்டுகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்களுக்கு ஆந்திர மக்கள் போர் படையினர்தான் பயிற்சியே தந்துள்ளனர்.
இந் நிலையில் அல்- உம்மா கும்பலுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கும் விவரம் போலீஸ் தலைமையகத்தைஉலுக்கியுள்ளது. நக்சலைட்டுகள் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வரும் ஐ.பி. பிரிவும் மத்திய உள்துறைஅமைச்சகமும் இந்த விஷயத்தில் உடனே அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளன.
மாவோ தீவிரவாதிகளுடனும்...?
இதற்கிடையே இந்த நக்சலைட்டுகளுக்கு சீனாவில் செயல்படும் மாவோ தீவிரவாதிகளுடனும் தொடர்புஇருப்பதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த நக்சலைட்டுகளிடம் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏராளமான "மாவோ" புத்தகங்கள் இருந்தன. மேலும்இவர்களிடமிருந்த வரைபடங்கள் மற்றும் வரைபடக் குறிப்புகள் அனைத்திலும் சீனாவின் "ஸ்டைல்" இருந்தது.
இதனால் சீனாவின் மாவோ தீவிரவாதிகள் இவர்களுக்கு உதவியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மேலும் இந்த நக்சலைட்டுகளிடம் இருந்து ஏராளமான ஆங்கில போர் பட சி.டிக்கள் மற்றும் கேசட்டுகளும்பிடிபட்டுள்ளன. மேலும் தனி மனித தாக்குதல் படங்களான "பர்ஸ்ட் பிளட்", "ராம்போ", "தி கிரேட் எஸ்கேப்"போன்ற ஆங்கிலப் படங்களின் சி.டிக்களும் பிடிபட்டுள்ளன.
இந்நிலையில் இந்த நக்சலைட்டுகள் சென்னை-கே.கே. நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்ததாகக் கிடைத்ததகவலைத் தொடர்ந்து அந்த வீட்டை போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள்கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-->
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications