கொளத்தூர் மணியின் இன்னொரு ஜாமீன் வழக்கு மீது இன்று தீர்ப்பு
கொள்ளேகால்:
கொள்ளேகால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கொளத்தூர் மணியின் ஜாமீன் மனுவின் மீதான விசாரணை இன்றுநடக்கிறது.
நேற்று இந்த நீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மைசூர் நீதிமன்றத்தில் ஒரு ஜாமீனும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 3 ஜாமீன்களும் பெற்றுவிட்ட கொளத்தூர் மணிக்குகொள்ளேகால் நீதிமன்றத்திலும் ஜாமீன் கிடைத்தால் தான் அவரால் தூது போக முடியும்.
கொள்ளேகால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தந்துவிடும் என்று கருதப்பட்டாலும் மைசூர் நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்குவிசாரணை டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 4ம் தேதி வரை அவர் தூது செல்ல முடியாது.
ஆனால், வீரப்பனின் 12 நாள் கெடு டிசம்பர் 2ம் தேதியுடன் முடிகிறது.
பெர்னான்டஸ் ஆலோசனை:
இந் நிலையில் வீரப்பனை மீட்பது குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயுடன் பாதுகாப்பு அமைச்சர்ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆலோசனை நடத்தினார். கடந்தமுறை ராஜ்குமாரை மீட்க தூது சென்ற கர்நாடக தமிழர் பேரவையிைன்தலைவர் சண்முகசுந்தரத்துடனும் பெர்னாண்டஸ் ஆலோசனை நடத்தினார்.
அப்போது காட்டுக்குள் செல்ல கொளத்தூர் மணி தயாராக உள்ளதாக பெர்னாண்டசிடம் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.
நமது நிருபரிடம் பேசிய சண்முகசுந்தரம் கூறியதாவது:
கொளத்தூர் மணி மீது போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளும் பொய்யானவை. அவருக்கு ஜாமீன் கிடைத்தாலே போதும். எல்லாவழக்குகளில் இருந்தும் அவர் நிச்சயம் விடுதலையாகிவிடுவார்.
வீரப்பனைச் சந்திக்க காட்டுக்குள் செல்ல அவர் முழுக்க முழுக்க தயாராக இருக்கிறார் என்றார்.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications