பொள்ளாச்சி: தப்பிய கைதிகள் பிடிபட்டனர்- 5 சிறை வார்டன்கள் சஸ்பெண்ட்
கோவை:
பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து சனிக்கிழமை அதிகாலை தப்பிச் சென்ற 3 கைதிகளில் 2 பேர் மீண்டும்பிடிபட்டனர். முன்னதாக இந்தச் சிறை கண்காணிப்பாளர் உள்பட 5 வார்டன்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
பொள்ளாச்சி சிறையிலிருந்து அபு, அஷ்ரப், காஜப்பா ஆகிய 3 விசாரணைக் கைதிகள் நேற்று அதிகாலை தப்பிச்சென்றனர். இந்த கிளைச் சிறையில் உள்ள 91 பேரும் விசாரணைக் கைதிகளாவர். இதில் 7 பேர் பெண்கள்.
சிறைக்கு எதிரேதான் காவல் நிலையம் உள்ளது. கைதிகள் தப்பிய தகவல் தெரிய வந்ததும் உடனடியாக போலீஸில்புகார் கொடுக்கப்பட்டது. தப்பியோடிய கைதிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டைநடந்தது.
இதில் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே அபுவும், ஆனைமனை சின்னப்பள்ளி வாசல் தெருவில் காஜப்பாவும்இன்று பிடிபட்டனர்.
அஷ்ரப்பைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக கோவை ஊரக மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர்தினகரன் கூறினார்.
முன்னதாக கோயம்புத்தூர் மத்திய சிறை எஸ்.பி. கோபால் பொள்ளாச்சி சிறைக்கு வந்து விசாரணை நடத்தினார்.இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி சிறைக் கண்காணிப்பாளர் வசந்தமோகன், தலைமை வார்டர் தங்கவேலு,வார்டன்கள் முருகேசன், சுரேஷ் குமார், பாலசுப்ரமணியம் ஆகிய ஐந்து பேரையும் சஸ்பெண்ட் செய்துஉத்தரவிட்டார்.
-->












Click it and Unblock the Notifications