தீவிரவாதிகளின் கைகளை அடையும் பாக். அணு ஆயுதங்கள்
சிம்லா:
பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகளின் கைகளுக்குச் செல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் கூறியிருப்பது உண்மை தான் என இந்தியாவும் கருத்துத் தெரிவித்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக புடின் நாளை இந்தியா வருகிறார். இப்போது அவர் சீனாவில் உள்ளார். இந்தியா-ரஷ்யா-சீனாவைஉள்ளடக்கிய பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து அவர் பேச்சு நடத்த உள்ளார்.
தனது சீன, இந்திய பயணத்தை ஒட்டி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு புடின் சிறப்புப் பேட்டியளித்தார். அதில், பாகிஸ்தானில்தீவிரவாதிகள் அரசிலும் ஊடுருவி விட்டதாகவும், அவர்களது கைகளில் அந் நாட்டு அணு ஆயுதங்கள் சிக்க நிறைய வாய்ப்புஇருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
பாகிஸ்தானின் அணு ஆராய்ச்சி, ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ள இடம், அவற்றை கையாளும் நபர்கள் குறித்து அனைத்துவிவரங்களும் ரஷ்யாவுக்குத் தெரியும் எனவும், பாகிஸ்தானின் உளவுப் பிரிவுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையிலானஉறவினால் இந்த ஆயுதங்கள் தவறான ஆட்களின் கைகளில் போய்ச் சேர வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
வாஜ்பாய் கருத்து:
புடின் கூறியுள்ள இந்தக் கருத்து உண்மை தான் என இந்தியப் பிரதமர் வாஜ்பாய் கூறியுள்ளார்.
சிம்லாவில் நிருபர்களிடம் பேசிய அவர், இந்தக் குற்றச்சாட்டு மிகத் தீவிரமானது. இதை உலக நாடுகள் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். பாகிஸ்தானின் ஆதரவாளர்களாக உள்ள நாடுகள் (அமெரிக்கா) இதில் தலையிடாவிட்டால் நிலைமைமோசமாகிவிடும் என்றார் வாஜ்பாய்.
ரஷ்ய அணு மையங்களில் இந்தியர்கள்:
இதற்கிடையே தனது பரம ரகசியமான அணு ஆராய்ச்சி மையங்களில் இந்திய விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளிக்க ரஷ்யா முன்வந்துள்ளது.
இதுவரை சீனா மற்றும் முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளைத் தவிர வேறு எந்த நாட்டையும் தனது அணு ஆராய்ச்சிமையங்களுக்குள் ரஷ்யா அனுமதித்ததே இல்லை.
நாளை இந்தியா வரும் புடின் இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள உள்ளார்.
பாகிஸ்தானுக்கு மீண்டும் எச்சரிக்கை:
காஷ்மீருக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் உடனே கைவிட வேண்டும் என ரஷ்யா மீண்டும் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக புடினின் அலுவலகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதை நிறுத்தாதவரை அந்த நாட்டுடன் இந்தியா பேச்சு நடத்ததாது. பாகிஸ்தானின் தீவிரவாதம் குறித்து புடின் இந்தியத் தலைவர்களுடன்டெல்லியில் ஆலோசனை நடத்துவார் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-->
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications