குழந்தை கை அழுகிய விவகாரம்: மனித உரிமை கமிஷன் விசாரணை
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனையில் வயிற்றுப் போக்கிற்காக சேர்க்கப்பட்ட 8 மாத ஆண் குழந்தைக்கு தவறானசிகிச்சை அளிக்கப்பட்டதால் அதன் வலதுகை முழுவதுமாக அழுகியது. இதனால் அந்தக் கை வெட்டிஎடுக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் உசேன் என்ற 8 மாத ஆண் குழந்தை வயிற்றுப் போக்குக்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதற்காக சமீபத்தில் சேர்க்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்குப் பிறகு குழந்தையின் வலது கை நீல நிறத்தைஅடைந்து அழுகத் தொடங்கியது.
இதனால் குழந்தையின் வலதுகை ஆபரேஷன் மூலம் துண்டிக்கப்பட்டது. ரத்த ஓட்டம் தடை பட்டதால் தான் கைஅழுகியதாகவும் லட்சத்தில் ஒரு குழந்தைக்கு இது போல நடப்பதுண்டு எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், தவறான சிகிச்சை அளிக்கப்பட்டது தான் குழந்தையின் கை அழுகியதற்குக் காரணம் என்ற குற்றச்சாட்டும்எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில் மருத்துவக் குழு அமைக்கப்பட்டுவிசாரணை நடந்தது. இருப்பினும் இக் குழுவினர் தங்களது அறிக்கையில், சிகிச்சை குறித்து ஏதும் குறிப்பிடாமல்குழந்தை நன்றாகஉள்ளது, விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று மட்டுமே கூறியுள்ளனர்.
இதன்மூலம் சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்களை காப்பாற்றும் வேலையில் இந்த விசாரணைக் குழுஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதை உணர்ந்த மாநில மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரத்தை தனது கையில் எடுத்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மருத்துவக் கல்வி இயக்குனகுத்து மனித உரிமைக் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications