போன் பில் பாக்கியை தவணை முறையில் செலுத்த தயார்: சோ.பா.
சென்னை:
போன் பில் பாக்கித் தொகையை தவணை முறையில் கட்ட தயாராக உள்ளதாக காங்கிரஸ் தலைவர்சோ.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பரமகுடியில் கடந்த 4 ஆண்டுகளாக தனது வீட்டு போன் பில்லைக் கட்டாமல் உள்ளார் சோ.பாலகிருஷ்ணன். இந்தபாக்கித்தொகை ரூ. 2.50 லட்சத்தை உடனடியாகக் கட்ட வேண்டும் என்று சமீபத்தில் பரமக்குடி கோர்ட்உத்தரவிட்டது.
இதுகுறித்துசென்னையில் செய்தியாளர்கள் கேட்டபோது, சோ.பா கூறியதாவது:
போன் பில்லைக் கட்டத் தயாராகவே உள்ளேன். தவணை, தவணையாக கட்ட நான் ரெடி. கடந்த முறை நான்எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அரசு சார்பில் எனக்கு 2 தொலைபேசிகள் வழங்கப்பட்டன.
அதில் ஒரு தொலைபேசியில் இருந்த எஸ்.டி.டி. வசதியை, பரமக்குடியில் உள்ள எனது சொந்த போனுக்குமாற்றுமாறு கேட்டுக் கொண்டேன். அது போலவே செய்யப்பட்டது
இந்த எஸ்.டி.டி. வசதிக்கான கட்டணத்தை மாநில அரசே செலுத்தி விடும் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால்ரூ. 2.50 லட்சம் வரை பாக்கித் தொகை இருப்பதும், அதை நான்தான் கட்ட வேண்டும் என்றும் கோரி கோர்ட்டில்தொலைபேசித்துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது.
இந்த பாக்கித் தொகையை நானே கட்டி விடுவேன். அரசிடம் பொறுப்பை தள்ளி விட மாட்டேன். தவணைமுறையில் கட்டுவதற்கு அனுமதி தரக் கோரி எனது வக்கீல் மூலம் கோர்ட்டில் அனுமதி பெற முடிவு செய்துள்ளேன்என்றார் சோ.பா.
இது தவிர இவருக்குச் சொந்தமான ஒரு மில்லில் பல லட்சம் அளவுக்கு மின்சாரக் கட்டண பாக்கிவைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications