மண்டை ஓடுகளுக்காக ரொம்ப அலைஞ்சோம்ங்க.. போலீசிடம் மந்திரவாதிகள் தகவல்
தர்மபுரி:
கிருஷ்ணகிரி அருகே 108 மனித மண்டை ஓடுகளுடன் கைதான மந்திரவாதிகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்வெளியாகிய வண்ணம் உள்ளன.
கிருஷ்ணகிரி அருகே பச்சகானப்பள்ளி என்ற கிராமத்தில் 7 மந்திரவாதிகளை போலீஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் அனைவரும் தர்மபுரி,சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
உடல் ஊனமுற்றவர்களுக்கு பூஜை செய்து சரி செய்வது, பேய், பிசாசு பிடித்ததாக கூறப்பட்டுள்ளவர்களுக்கு பேய்ஓட்டுவது என சகல விதமான மாந்த்ரீக வேலைகளில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
"அமைதியான" முறையில் அவர்கள் வாழ்க்கை கழிந்து கொண்டிருந்த நிலையில், கிராமத்து மக்களை மிரட்டஆரம்பிக்கும் வேலையில் இறங்கவே பொதுமக்கள் போலீஸாரிடம் போய் விட்டனர்.
ஏற்கனவே நக்சலைட்களால் பெயர் கெட்டுப் போய் எரிச்சலில் இருந்த போலீசார் மந்திரவாதிகளை வளைத்துப்பிடித்தனர். போலீஸ் ஸ்டேசனில் வைத்து இந்த 7 போலி மந்திரவாதிகளிடமும் லாடம் கட்டி விசாரித்தனர்.
நக்சலைட்கள் மீதுள்ள கோபத்தை இவர்கள் மீது போலீசார் காட்டவே மந்திரவாதிகளின் உடலெங்கும் ரத்தக்காயம். அடி தாங்காமல் தாங்கள் செய்த ரவுசுகளை எல்லாம் போலீசாரிடம் கூறிவிட்டனர்.
அப்போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
108 மண்டை ஓடுகளையும் "கலெக்ட்" செய்வதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்றாகி விட்டதாம். சேலம்,தர்மபுரி மாவட்டங்களில் பல சுடுகாடுகளில் சுற்றியலைந்து வெட்டியான்களுக்கு காசு கொடுத்து இந்த மண்டைஓடுகளை விலைக்கு வாங்கியுள்ளார்களாம்.
ஒரு மண்டை ஓடு ரூ. 20 முதல் 40 வரை கொடுத்து வாங்கப்பட்டதாம். மண்டை ஓடுகளை எடுக்க உதவியசுடுகாட்டு வெட்டியான்களுக்கு சாராயமும் வேறு வாங்கித் தந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி, ஓமலூர், சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள சுடுகாடுகளை அணுகி அங்கிருந்த வெட்டியான்களிடம்பேரம் பேசி, பாட்டிலைக் காட்டி மசிய வைத்து இந்த மண்டை ஓடுகளை இவர்கள் வாங்கியுள்ளார்கள். தலைச்சன்ஆண் குழந்தை மற்றும் ஆண்களின் மண்டை ஓடுகளாகப் பார்த்து இவற்றை வாங்கியுள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications