தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக பதவியேற்றுள்ள முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான லட்சுமிபிரானேஷுடன் சேர்த்து தமிழகத்தில் முக்கியப் பொறுப்புகளில் உள்ள பெண் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின்எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

Lakshmi Pranesh with Jayalalithaலட்சுமி பிரானேஷுடன் சேர்த்து மொத்தம் 10 பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தற்போது தமிழக அரசின் முக்கியப்பொறுப்புகளில் உள்ளனர். அவர்கள் விவரம்:

கரியாலி, லீனா நாயர், கிரிஜா வைத்தியநாதன், சூசம்மா, சூசன் மாத்யூ, ஜெயந்தி, ஷீலா ராணி சுங்கத், ஷீலாபிரியா, ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர்தான் அந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

முதல்வரின் செயலாளராக ஷீலா பாலகிருஷ்ணன் இருக்கிறார். சுகாதாரத் துறை செயலாளராக கிரிஜாவைத்தியநாதன் உள்ளார். சுற்றுலாத் துறை செயலாளராக ஜெயந்தி உள்ளார்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக ஷீலா ராணிசுங்கத் இருக்கிறார். ஆளுனரின் தனிச் செயலராக ஷீலாபிரியா பொறுப்பு வகித்து வருகிறார்.

திலகவதி ஐ.பி.எஸ்:

ஐ.பி.எஸ். அதிகாரிகளில் அரசியல் மற்றும் அதிகாரரீதியில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் திலகவதி ஐ.பி.எ.லஞ்ச ஒழிப்புத் துறையின் கூடுதல் டி.ஜி.பி. பதவியில் இருந்து கொண்டு திமுகவினர் வீடுகளில் வாராவாரம் ரெய்ட்நடத்தி வருகிறார்.

சுகவனேஸ்வர் மாற்றம் ஏன்?

இதற்கிடையே தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து சுகவனேஸ்வர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டது ஏன் என்ற விவரம் கோட்டைவட்டாரத்தில் விசாரித்தபோது தெரியவந்தது.

சமீபத்தில் மாநில அரசு ஊழியர்கள் நடத்திய ஸ்டிரைக்கை அரசு கையாண்ட விதத்தில் சுகவனேஸ்வருக்கு மன வருத்தம் இருந்து வந்துள்ளது. அரசு ஊழியர்களைஅரசே எதிரிகள் போல நடத்தக் கூடாது என்று உயர் மட்டக் கூட்டங்களில் அவர் பேச முதல்வர் ஜெயலலிதாவிடம் டோஸ் கிடைத்திருக்கிறது.

இந் நிலையில் மாநிலத்தின் போக்குவரத்துத்துறையை தனியாருக்கு வாரிக் கொடுக்கக் கூடாது என்பதிலும் சுகவனேஸ்வர் தீவிரமாக இருந்தாராம்.இது ஒரு சேவைத் துறை. இதை அரசு தான் வைத்திருக்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவின் கருத்தில் இருந்து மாறுபட்டாராம்.

மேலும் தொடர்ந்து இது போல பல விஷயங்களில் முதல்வரின் கருத்துக்களோடு தனது நிலை ஒத்துப் போகாததை உணர்ந்த அவர், தானாகவே முன் வந்துஇந்தப் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

இதற்காகவே காத்திருந்தது மாதிரி அவரைத் தூக்கி டான்சி நிறுவனத்துக்குப் போட்டுவிட்டு லட்சுமி பிரனேஷை உட்கார வைத்துவிட்டார் ஜெயலலிதாஎன்கிறார்கள்.

இது தவிர சுகவனேஸ்வருக்கு உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது. கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் சபைக்குள்ளேயே மயங்கி விழுந்தார்.இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

வேலை பிரஷ்ஷர் அதிகம் இருப்பதால் அவருக்கு உதவி செய்யவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள் அதிமுக அலுவலகத்தில்.

14 வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு...

இதற்கிடையே லட்சுமி பிரனேஷின் நியமனத்தால் கோட்டையில் உள்ள மூத்த அதிகாரிகள் மத்தியில் பெரும் எரிச்சல் நிலவுகிறது.

அதிகாரிகளின் சீனியாரிப்படி 14 இடத்தில் இருந்தவர் லட்சுமி. ஆனால், 13 அதிகாரிகளை ஒதுக்கிவிட்டு லட்சுமியை இந்தப் பதவியில் உட்கார வைத்ததன்மூலம் மூத்த அதிகாரிகளின் ஒட்டு மொத்த எரிச்சலைப் பெற்றுள்ளார் ஜெயலலிதா.

ஆனால், இந்த அதிகாரிகளில் ஒரு அதிகாரி மட்டும் லட்சுமியின் நியமனத்தால் மகிழ்ந்து போய் இருக்கிறார். அவர் வேறு யாருமல்ல லட்சுமியின் கணவர்பிரனேஷ் தான். இவர் இப்போது தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையில் முதன்மைச் செயலாளராக உள்ளார். இதுதலைமைச் செயலாளர் அந்தஸ்து கொண்ட பதவியாகும்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமிக்கு இன்னும் 3 ஆண்டுகள் சர்வீஸ் உள்ளது. 1968ல் ஐ.ஏ.எஸ். ஆனவர் இவர். சமூக நலத்துறை, உணவுத் துறை,தொழிலாளர் நலத்துறை, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி இயக்குனரகம் ஆகிய துறைகளின் செயலாளராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்.

கேலிக்கூத்து என்கிறது காங்கிரஸ்:

இதற்கிடையே அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் ஜெயலலிதா அடிக்கடி மாற்றி கேலிக்கூத்து நடத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், 14-வது நிலையில் இருந்த ஒரு அதிகாரியை தலைமைச்செயலாளராக்கியிருக்கிறார் ஜெயலலிதா. இது பிற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளும், அமைச்சர்களும் மக்கள் நன்மையைக் கருத்தில் கொண்டுதான் மாற்றப்பட வேண்டும். இதுதான் பாராளுமன்ற நடைமுறை விதி. ஆனால்இப்போது காரணமே இல்லாமல் அடிக்கடி அதிகாரிகளும், அமைச்சர்களும் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார் பீட்டர் அல்போன்ஸ்

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+