ஆக்கிரமிப்பு நிலத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகம்
சென்னை:
சென்னையில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை போலீஸ் இயக்குநரகத்தின் புதிய அலுவலகத்தைமுதல்வர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் இந்த புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
முதலில் அண்ணாசாலையில் லஞ்ச ஒழிப்புப் போலீசாருக்கு அலுவலகம் அமைக்கப்பட்டது. போலீசாரின்எண்ணிக்கையும் லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைகளும் அதிகரித்ததையடுத்து அண்ணாநகரிலும்நந்தனத்திலும் மேலும் 2 கட்டடங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டன.
ஏகப்பட்ட பணம் வாடகைக்கே செலவானதால் சொந்தக் கட்டடம் ஒதுக்க லஞ்ச ஒழிப்புத் துறை கோரியது.
இதையடுத்து இந்தக் கட்டடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதலில் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு குடியிருப்புவளாகமாகத் தான் இங்கு 8 பெரிய வீடுகள் கட்டப்பட்டன. ஆனால் ஆக்கிரமிப்பு இடத்தில் இந்த வீடுகள்கட்டப்பட்டுள்ளதாக கூறி நீதிபதிகள் இங்கு குடியேற மறுத்து விட்டனர்.
இதையடுத்து இதில் ஒரு பங்களாவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இயக்குநரகத்திற்கு தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
மற்ற வீடுகள் பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல அலுவலகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆக்கிமிப்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸ் இயங்க உள்ளது.
இக் கட்டடத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தை ஜெயலலிதா திறந்து வைத்தார். லஞ்ச ஒழிப்பு கூடுதல்டிஜிபி திலகவதி, அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், செம்மலை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர்விஜயக்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-->
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications