காடுவெட்டி குருவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை:
தலைமறைவாகியுள்ள பாமக எம்.எல்.ஏவான காடுவெட்டி குருவின் முன் ஜாமீன் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
செங்கல்வராயன் அறக்கட்டளைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி உள்ளிட்டஅறங்காவலர்கள் பதவியேற்க வந்த போது அவர்களைப் பாமகவினர் தடுத்து கலாட்டா செய்தனர். அவர்களில்பாமக தலைவர் ஜி.கே. மணியும் காடுவெட்டி குருவும் அடங்குவர்.
இதையடுத்து இவர்கள் இருவருமே தலைமறைவாகிவிட்டனர். மணி மட்டும் கடந்த வாரம் எழும்பூர் நீதிமன்றத்தில்சரணடைந்தார். இவ்வழக்கு தொடர்பாக 17 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள காடுவெட்டி குருவின் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளன.
கடந்த 1997ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் கோட்டியால் கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கத்தை சட்டவிரோதமாக இழுத்து மூடியதாக அவர் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.
தொடர்ந்து 1998ம் ஆண்டு ஜெயங்கொண்டத்தில் நடந்த ஒரு கண்டனப் பொதுக் கூட்டத்தில் பொதுமக்களையும்,போலீசாரையும் அச்சுறுத்தும் வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின்னர் கடந்த 2000ம் ஆண்டு மேலூர் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்த வந்த வருவாய் அதிகாரிகளிடம்வெடிகுண்டு வீசுவோம் என்று கூறி மிரட்டியது தொடர்பாக காடுவெட்டி குரு மீது மற்றொரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது.
இந்த மூன்று வழக்குகள் தொடர்பாக காடுவெட்டி குருவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டுகளைப்பிறப்பித்து ஜெயங்கொண்டம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தலைமறைவாகியுள்ள காடுவெட்டி குரு முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுஒன்றைத் தாக்கல் செய்தார்.
நீதிபதி மலை சுப்பிரமணியம் இந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications