ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை கொல்ல முயன்றவருக்கு 7 ஆண்டு சிறை
ராமநாதபுரம்:
ஆர்.எஸ்.எஸ். பிரமுகரைக் கொலை செய்ய முயற்சித்த வழக்கில் திருநெல்வேலியைச் சேர்ந்த முகம்மது காசிம்என்பவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அதிவிரைவு கோர்ட்டில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 1996ம் ஆண்டு ராமநாதபுர மாவட்டஆர்.எஸ்.எஸ். செயலாளராக இருந்த வக்கீல் குப்புராம் என்பவரைக் கொலை செய்ய முயற்சி நடந்தது.
சம்பவத்தன்று நள்ளிரவு, குப்புராமின் வீட்டுக்கு வந்த இரண்டு பேர், வழக்கு விஷயமாக பேச வேண்டும் என்றுகூறி அவரை வெளியே அழைத்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் குப்புராமின் கையைப் பிடித்து பின்னால்கட்டியுள்ளார்.
பின்னர், அவரை இருவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கினார்கள். இதில் குப்புராமின் மண்டை உடைந்தது. அவர்மயங்கினார். அவர் இறந்துவிட்டதாகக் கருதிய இந்த இரு நபர்களும் அங்கிருந்து தப்பி விட்டனர்.
இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார் குப்புராம். தீவிர விசாரணைக்குப் பின், முகம்மது காசிம், சிவா என்றஅப்துல்லா ஆகிய இருவரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குத் தொடரப்பட்டது. விரைவு கோர்ட் நீதிபதி ராஜா சொக்கலிங்கம் இந்தவழக்கை விசாரித்து, காசிமுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்துத் தீர்ப்பளித்தார். அப்துல்லா விடுதலைசெய்யப்பட்டார்.
-->


