சுத்த தமிழ் பெயர்கள் சூட்டிய தலித்கள்
சென்னை:
தமிழக அரசின் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த2,000 பேர் தங்களது இந்துப் பெயர்களைக் கைவிட்டுவிட்டு சுத்தத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டிக் கொண்டுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இந்த பெயர் மாற்ற நிகழ்ச்சி நடந்தது. இதில்ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், எல்லோரும் தங்களது குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவார்கள். நான் எனதுதந்தை ராமசாமியின் பெயரை இன்று முதல் தொல்காப்பியர் என்று மாற்றி சூட்டுகிறேன். இதை எனது தந்தையும்ஏற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன் என்றார்.
அதேபோல, திருமாவளவனின் சகோதரி வளர்மதி தனது பெயரை வான்மதி என்று மாற்றிக் கொண்டார். மற்றொருஉறவினர் மாலதி தனது பெயரை மலைமதி என்று மாற்றிக் கொண்டார்.
திருமாவளவன் என்ற பெயர் மகாவிஷ்ணுவின் பெயர் என்று தவறாக கூறப்படுகிறது, உண்மையில் அது சுத்தமானதமிழ்ப் பெயர், மன்னன் என்று அதற்குப் பொருள். அதனால் எனது பெயரை மாற்றிக் கொள்ளவில்லை என்றார்திருமாவளவன்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகள் பாவல் (பாவலன்), கோவிந்தசாமி (கோவேந்தன்), முருகன்(அழகன்), சீதாராமன் (ராவணன்) ஆகியோரும் தங்களது பெயர்களை மாற்றிக் கொண்டனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 1,061 தலித்கள் தங்கள் பெயரை மாற்றிக் கொண்டனர். இந்த மாவட்டத்தில்தான் அதிகம் பேர் பெயர்களை மாற்றினர்.
அதுபோல சென்னையைச் சேர்ந்த 400 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 480 பேரும், கடலூர்மாவட்டத்தைச் சேர்ந்த 500 பேரும் தங்களது இந்துப் பெயர்களை மாற்றிக் கொண்டுள்ளதாக திருமாவளவன்தெரிவித்தார்.
இந்தப் பெயர் மாற்றம் தமிழகத்தில் தலித்கள் மத்தியில் தொடர்ந்து நடக்கும் என்றும் மேலும் 6,000 பேர்பெயர்களை மாற்ற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
நிகழ்ச்சியின்போது, தமிழ் அறிஞர் இறைக்குறவனார் எழுதிய தமிழ்ப் பெயர்கள் என்ற நூல் வெளியிடப்பட்டது.
-->
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications