Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ.300 கோடி சொத்து குவித்த கல்கி பகவான்: விசாரணை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கல்கி பகவானின் சொத்துக்கள், அவருக்கு எங்கிருந்து பணம் வருகிறது ஆகியவை குறித்து விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஸ்வநாத சுவாமி என்பவர் இது தொடர்பாக தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில்,

கல்கி பகவான் நிறுவியுள்ள அறக்கட்டளைக்கு கோடிக்கணக்கில் நிதி வருகிறது. அந்தப் பணத்தை கிராம மக்களின்மேம்பாட்டுக்காக பயன்படுத்தப் போவதாக கல்கி பகவான் கூறியுள்ளார். ஆனால் இதுவரை ஒரு பைசா கூடஅதற்காக செலவிடப்படவில்லை.

மாறாக, கல்கி பகவானின் மகனுடைய வியாபாரத்தை மேம்படுத்துவதற்காகவே இந்தப் பணம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

கல்கி பகவானின் அறக்கட்டளையில் தற்போது ரூ.300 கோடி அளவுக்கு சொத்து உள்ளது. இந்தப் பணம்எங்கிருந்து வந்தது, அந்தப் பணத்தை எப்படி செலவிடுகிறார்கள் என்பது குறித்த விசாரணை நடத்த வேண்டும்என்று தமிழக அரசின் அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.

எனவே உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாக தனது மனுவில்விஸ்வநாத சுவாமி கூறியிருந்தார்.

மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கியபெஞ்ச் இது தொடர்பாக தமிழக அரசின் உள்துறைச் செயலாளர், டி.ஜி.பி. ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டது.

மேலும் இவ்வழக்கு விசாரணையை வரும் 16ம் தேதிக்கு ஒத்திவைத்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+