குஜராத்தில் நாளை தேர்தல்: வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிப்பு
டெல்லி:
குஜராத்தில் நாளை சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகதலைமைத் தேர்தல் ஆணையர் ஜே.எம். லிங்டோ கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மாநிலத்தின் 181 தொகுதிகளிலும் தேர்தல் நடத்த 36,657 வாக்குச் சவாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலைஜம்மூ-காஷ்மீரில் நடந்ததைப் போல 17 வெளிநாட்டுத் தூதர்களும் 20 சிறப்புப் பார்வையாளர்களும் கண்காணிப்பர். (அங்குநடந்த மதக் கலவரத்தை பல நாடுகளும் கண்டித்தன. மாநில அரசே கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டின என்பதுநினைவுகூறத்தக்கது. இதனால் வெளிநாட்டு பார்வையாளர்களைக் கொண்டு வந்துள்ளது தேர்தல் கமிஷன்)
குஜராத்தில் 3.32 வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் வந்து வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும்செய்யப்பட்டுள்ளன.
மதக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களை அடையாளம்கண்டுபிடித்து ஓட்டுரிமை தந்துள்ளோம். இதற்காக தேர்தல் கமிஷன் மிகவும் சிரமப்பட்டது. அவர்களை தேடிப் பிடிப்பதே மிகக்கஷ்டமான பணியாகிவிட்டது.
இதில் 1.76 லட்சம் பேரை தேடிப் பிடித்துவிட்டோம். அவர்கள் தங்கியுள்ள பகுதிகளிலேயே உள்ள வாக்குச் சாவடியில் பெயரைச்சேர்த்துவிட்டோம். இதனால் அவர்கள் வாக்களிக்க முடியும். (இவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தினால் தனக்குசாதகமாக இருக்கும் என பா.ஜ.க. நினைத்தது. ஆனால், இவர்களைத் தேடிப் பிடித்து வாக்களிக்க ஏற்பாடு செய்துள்ளது தேர்தல்கமிஷன்).
மதக் கலவரத்தால் விரட்டி அடிக்கப்பட்டு, எங்களால் தேடிக் கண்டுபிடிக்க முடியாத மக்கள் பெரும் எண்ணிக்கையில் படான்,பஞ்ச்மகால், ஆனந்த் மாவட்டங்களில் தான் குடியேறியுள்ளனர். இதனால் இந்த மாவட்டங்களில் இவர்கள் வாக்களிக்க வசதியாகசிறப்பு வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்.
இந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இந்த வாக்குச் சாவடிகள் இருக்கும். வீடுகள் அழிக்கப்பட்டால் வேறு இடங்களில்குடியேறிய இந்த மக்கள் கலெக்டர் அலுவலகங்களில் வந்து தங்கள் அடையாளத்தைக் காட்டி வாக்களிக்கலாம்.
எல்லா இடங்களிலும் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் தான் பயன்படுத்தப்படும்.
வாக்குச் சாவடிகளில் 4 அதிகாரிகள் இருப்பார்கள். அதில் 2 பேர் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.(இதனால் குஜராத் அரசு ஊழியர்களைக் கொண்டு பா.ஜ.க. விளையாட நினைத்ததில் தேர்தல் கமிஷன் விளையாண்டுவிட்டது).
குஜராத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்கு நான் 380 கம்பெனி மத்திய படைகளைக் கோரினேன். அதை மத்திய அரசு தந்துவிட்டது.இந்தப் படையினரும் மாநில போலீசாரும் இணைந்து தேர்தலை நியாயமாகவும் அமைதியாகவும் நடத்தி முடிப்பார்கள் (முதல்ல்380 கம்பெனி படையைத் தர மத்திய அரசு மறுத்தது).
பாதுகாப்பு மிகத் தீவிரமாக இருக்கும். எனவே, வாக்காளர்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.வெளிநாட்டுப் பார்வையாளர்களும் பத்திரிக்கை, டிவிக்களும் தேர்தலை தீவிரமாக கண்காணிகப் போகிறார்கள். விதிகளை மீறிஆட்டம் போடாமல் தொண்டர்களை அனைத்துக் கட்சிகளும் அடக்கி வைக்க வேண்டும் என்றார் லிங்டோ.
ஏற்கனவே லிங்டோவை கிருஸ்துவர் என்று சொல்லி விமர்சித்து வரும் பா.ஜ.கவுக்கு தேர்தல் கமிஷனின் இந்த கட்டுப்பாடுகளும்,விரட்டியடிக்கப்பட்ட சிறுபான்மையினரை தேடிப் பிடித்து வாக்களிக்க வசதி செய்து தந்ததும் மேலும் எரிச்சலைக் கூட்டும்.
தேர்தல் முடிவு தங்களுக்கு பாதமாக வந்தால் லிங்டோ மீது பா.ஜ.க. பாயும் என்பது மட்டும் நிச்சயம்.
-->
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications