காவிரி பிரச்சனை: திராவிட கட்சிகளே காரணம்- சோ.பா. பாய்ச்சல்
திருச்சி:
காவிரிப் பிரச்சனைக்குத் தொடர்ந்து தீர்வு ஏற்படாமல் போவதற்கு திராவிடக் கட்சிகளே காரணம் என்றும்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமராக இருந்திருந்தால் இப்போது அந்தப் பிரச்சனையை தீர்ந்துபோயிருக்கும் என்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் கூறினார்.
திருச்சியில் இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
எந்தவிதமான தீர்வும் ஏற்படாமல் காவிரிப் பிரச்சனை நீண்டு கொண்டே செல்கிறது. இதற்குத் தமிழகத்தைஇவ்வளவு நாட்களாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே காரணம்.
மேலும் காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாமல் போனதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் மிக முக்கியகாரணம். பிரதமர் வாஜ்பாயும் இந்தப் பிரச்சினையில் உரிய அக்கறை காட்டவில்லை.
ஜெயலலிதா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தபோது, வாஜ்பாய் வீட்டின் முன்பாக தர்ணாநடத்தலாம் என நானும், தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவனும் ஆலோசனை கூறினோம். ஆனால்அதை ஜெயலலிதா நிராகரித்து விட்டார்.
அரசியல் நாகரீகம் கருதி இதை இவ்வளவு நாளாக கூற விரும்பவில்லை. இப்போது கூற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சோனியா தற்போது பிரதமராக இருந்திருந்தால் காவிரிப் பிரச்சனையில் உடனடியாக உரிய தீர்வுகிடைத்திருக்கும்.
சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்துவது குறித்து மேலிடத்திடம் அனுமதிகேட்டுள்ளோம். கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட சில கட்சிகளிடம் இதற்கான ஆதரவையும் கேட்டுள்ளோம்என்றார் பாலகிருஷ்ணன்.
-->
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications