"செக்ஸ்" சாமியார் பிரேமானந்தாவுக்கு இரட்டை ஆயுள்: உயர் நீதிமன்றம் உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பல பெண்களைக் கற்பழித்தது, ஆசிரம சீடரை கொன்றது உள்ளிட்ட குற்றத்திற்காக வழங்கப்பட்ட இரட்டை ஆயுள்தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.

புதுக்கோட்டை மாவட்டம் பாத்திமா நகர் பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்த பிரேமானந்தா, கடந்த 1990 முதல்1994 வரை அங்கிருந்த 13க்கும் மேற்பட்ட பெண்களைக் கட்டாயப்படுத்தி கற்பழித்ததாகவும், இதை கண்டுபிடித்துவிட்ட ரவி என்ற என்ஜீனியரைக் கொன்று ஆசிரமத்திற்குள்ளேயே புதைத்து விட்டதாகவும் பரபரப்பான தகவல்கள்வெளியாகின.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட பிரேமானந்தாவுக்கு புதுக்கோட்டை செஷன்ஸ் நீதிமன்றத்தில் கடந்த 1997ம்ஆண்டு ஆகஸ்டு 20ம் தேதி இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் ரூ.66.3 லட்சம் அபராதம்விதிக்கப்பட்டது.

இந்த அபராதத் தொகையை கட்டாவிட்டால், மேலும் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும் என்றும்நீதிபதி பானுமதி தீர்ப்பளித்திருந்தார்.

இந்தத் தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தா சார்பில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய இரட்டை ஆயுள் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துஇன்று தீர்ப்பளித்தது. பிரேமானந்தாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரிதான் என்று நீதிபதி சண்முகம் மற்றும்நீதிபதி சொக்கலிங்கம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது.

ஆனால் அபராதத் தொகையை ரூ.66.3 லட்சத்திலிருந்து ரூ.61.3 லட்சமாகக் குறைத்த உயர் நீதிமன்றம்,இவ்வழக்கில் தொடர்புடைய ஒவ்வொரு குற்றவாளியும் ரூ.5 லட்சம் அபராதத் தொகையைக் கட்ட வேண்டும்என்றும் உத்தரவிட்டது.

அபராதத்தைக் கட்டத் தவறினால் கூடுதலாக 32 ஆண்டுகள் சிறைத் தண்டனையை பிரேமானந்தா அனுபவிக்கவேண்டும் என்ற செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

மேலும் பிரேமானந்தாவின் முக்கிய சீடரான கமலானந்தாவுக்கு வழங்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையையும்உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

பிரேமானந்தாவின் மனைவி சந்திரா தேவிக்கு 2 ஆண்டுகள் மற்றும் 7 மாதங்கள் கடுங்காவல் தண்டனைவிதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தண்டனையையும் உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

ஆனால் பிரேமானந்தாவின் மற்ற சீடர்களான நந்தகுமார், சதீஷ்குமார், மயில்வாகனன், பாலேந்திரன்ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனையை 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையாக உயர் நீதிமன்றம்குறைத்துள்ளது.

இந்த வழக்கில் மிகவும் திறமையாக துப்பு துலக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாகவும், புதுக்கோட்டைகோர்ட்டில் அளிக்கப்பட்ட தீர்ப்பு சிறப்பானது என்றும் நீதிபதிகள் பாராட்டு தெரிவித்தனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+