மாதேஸ்வரன் மலை முற்றுகை
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
சந்தனக் கடத்தல் வீரப்பன் மாதேஸ்வரன் மலைப் பகுதி காட்டுக்குள் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்துஅங்கு தமிழக மற்றும் கர்நாடக அதிரடிப் படையினர் கூட்டாக தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
நாகப்பா படுகொலைக்குப் பிறகு வீரப்பனைத் தேடும் பணியில் இரு மாநில அதிரடிப்படையினரும் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில், மாதேஸ்வரன் மலைப் பகுதி காட்டுக்குள் வீரப்பன் நடமாட்டம் இருப்பதாக உளவுப் பிரிவுதகவல்கள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இரு மாநில அதிரடிப்படை போலீஸாரும் தீவிரதேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
மேலும் டெல்லியில் இருந்து வந்த சி.ஆர்.பி.எப். கொரில்லா படையும் இந்தப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
-->












Click it and Unblock the Notifications