முதுமலை வனப் பகுதியில் நுழைய சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஊட்டி:
முதுமலை காட்டுப் பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்தப் பகுதியில் நடமாடி வரும் வீரப்பன் கும்பல் சுற்றுலாப் பயணிகளைக் கடத்திச் செல்ல வாய்ப்பு இருப்பதால் இந்தக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிங்காரம், மவநல்லா, போக்கபுரம், சிறுயூர் ஆகிய காட்டுப் பகுதிகளுக்குள் நுழையவே சுற்றுலாப் பயணிகளுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
முதுமலை வன விலங்கு சரணாலயத்தின் முக்கிய சாலைப் பகுதி தவிர காட்டுக்குள் எந்த வாகனமும் நுழையக் கூடாது என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் டூரிஸ்ட் ஆபரேட்டர்கள், பஸ்கள், வேன்கள், கார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்என வனத்துறையின் வடக்குப் பகுதி உதவிப் பாதுகாவலர் என்.சீனிவாசன் எச்சரித்துள்ளார்.
போலீசார், வனத்துறையினர் அல்லது சுற்றுலாப் பயணிகளை வீரப்பன் கடத்தலாம் என்று அதிரடிப்படையினர் கருதுகின்றனர்.ஏற்கனவே, காவல் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுவிட்டது.
இப்போது சுற்றுலாப் பயணிகளின் நடமாட்டத்தையும் காட்டுப் பகுதியில் கட்டுப்படுத்த ஆரம்பித்துள்ளது தமிழக அரசு.
இதே போன்ற நடவடிக்கைகளை எடுக்குமாறு கர்நாடக அரசுக்கும் தமிழகம் அறிவுறுத்தியுள்ளது.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications