நாடாளுமன்ற தாக்குதல்: 4 பேருக்கு தண்டனை
டெல்லி:
நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேர் குற்றவாளிகள் தான் என்றுடெல்லி தனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இவர்களுக்கான தண்டனை குறித்து நாளை அறிவிக்கப்படும்.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் அதிரடியாகப் புகுந்துதாக்குதல் நடத்தினர். துணை ஜனாதிபதி, பிரதமர், எம்.பிக்கள் உள்ளிட்டவர்களைக் கொல்லும் நோக்கத்துடன்தான்அவர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்தனர்.
ஆனால் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் திறமையுடன் செயல்பட்டு தீவிரவாதிகளின் முயற்சியைத் தடுத்தனர்.இந்தச் சம்பவத்தில் ஐந்து தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் கீலானி மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகம்மது பயங்கரவாதஅமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள தனி நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்தநவம்பர் இறுதியில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 11ம் தேதியே தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் மீண்டும் இன்றைக்கு தீர்ப்புஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று பகல் இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதி திங்க்ரா வழங்கினார்.
பேராசிரியர் கீலானி, ஜெய்ஷ்-ஏ-முகம்மது அமைப்பைச் சேர்ந்த முகம்மது அப்சால், சவுக்கத் ஹூசைன் மற்றும்ஹூசைனின் மனைவி நவ்ஜோத் சந்து என்று அப்சானா குரு ஆகிய நான்கு பேரும் குற்றவாளிகள்தான் என்றுநீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களைத் திட்டமிட்டதற்காக முதல் மூன்று பேரும், தன்னுடையவீட்டில் தீவிரவாதிகள் தங்கிய விஷயத்தை போலீசாரிடம் தெரிவிக்கவில்லை என்ற குற்றத்திற்காக அப்சானாவும்தண்டனைக்குரிய குற்றவாளிகளாக்கப்பட்டுள்ளனர் என்று நீதிபதி தன் தீர்ப்பில் கூறினார்.
இந்த நான்கு பேருக்கும் அளிக்கப்படவுள்ள தண்டனை குறித்து நாளை அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி திங்க்ராஇன்று கூறினார்.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications