ராணுவ சேர்க்கை தேர்வுக்கு வந்த இளைஞர்கள் ஆத்திரம்: இரும்பு கதவை உடைத்தனர்
கோயம்பத்தூர்:
கோயம்பத்தூரில் ராணுவத்திற்கு ஆள் எடுக்கும் தேர்வுக்கு வந்த இளைஞர்கள், தேர்வு நடக்காததால்ஆத்திரமடைந்து நேரு ஸ்டேடியத்தின் இரும்புக் கதவைப் பெயர்த்து எடுத்துவிட்டனர்.
கோயம்பத்தூர் நேரு ஸ்டேடியத்தில் மூன்று நாட்களுக்கு ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் தேர்வு நடப்பதாகஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று காலை முதலே ஏராளமான இளைஞர்கள் குவியத் தொடங்கினர்.
இந்நிலையில் ஸ்டேடியத்தின் கேட் திறக்கப்படாமலேயே இருந்தது. காத்திருந்து காத்திருந்து பொறுமையிழந்தஇளைஞர்கள் கதவுகளைத் திறக்குமாறு கூறி, ஸ்டேடியத்தின் 13 அடி உயர இரும்புக் கேட்டை பிடித்து தட்டஆரம்பித்தனர். ஆனால் கேட் திறக்கப்படவில்லை.
இதையடுத்து 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேர்ந்து இரும்புக் கேட்டைப் பிடித்து உலுக்க ஆரம்பித்தனர்.அவர்கள் உலுக்க உலுக்க அந்த பிரமாண்டமான இரும்பு கேட் பிய்த்துக் கொண்டு விழுந்தது.
தகவல் அறிந்ததும் மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜா மகேந்திரன் விரைந்து வந்து இளைஞர்களைசமாதானப்படுத்தினார். இந்த சம்பவம் இதுவரை நடக்காதது என்றார் அவர்.
ராணுவ அதிகாரி கர்னல் வி.கே. சர்மா கூறுகையில்,
ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் பணி செவ்வாய்க்கிழமைதான் (இன்று) தொடங்குகிறது. திங்கள்கிழமை சான்றிதழ்சரிபார்ப்பு மட்டுமே நடந்தது.
ஆனால் இதைப் புரிந்து கொள்ளாத இளைஞர்கள் ஆவேசப்பட்டு கேட்டை உடைத்து விட்டனர் என்றார் சர்மா.
-->
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications