விவசாயிகள் எலி தின்ற சம்பவம்: மத்திய, தமிழக அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி:
கடும் வறட்சி மற்றும் பசிக் கொடுமை காரணமாக தஞ்சாவூரைச் சேர்ந்த பல விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டஅவலம் குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் தமிழக அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
காவிரி டெல்டா பகுதியான தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு கடுமையான பஞ்சம் தலைவிரித்தாடியது.
கர்நாடக அரசின் பிடிவாதம் காரணமாக காவிரி நீர் கிடைக்காததால், கடந்த ஜூன் மாதம் நடந்திருக்க வேண்டியகுறுவை சாகுபடியும் இப்பகுதியில் நடைபெறவில்லை.
இதனால் அப்பகுதி விவசாயிகள் பசிக் கொடுமை வரை தள்ளப்பட்டனர். அடுத்த வேளை உணவுக்கேவழியில்லாத நிலையில் பல விவசாயிகள் எலிகளைப் பிடித்துக் கொன்று அதையே உணவாகச் சாப்பிட்டனர்.
இந்த அவல சம்பவத்தை தனியார் டி.வி. ஒன்று கடந்த ஆகஸ்டு மாதம் செய்தியில் ஒளிபரப்பியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர் அஸ்வின் குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
காவிரி டெல்டா பகுதியில் நீரின்றி, உணவின்றி வாடும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.164 கோடிநிதி இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் அங்கு வறட்சியும் பஞ்சமும் தலைவிரித்தாடுகின்றன. இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தன்மனுவில் அஸ்வின் குமார் கூறியிருந்தார்.
நீதிபதி காரே மற்றும் நீதிபதி சின்ஹா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது.இச்சம்பவம் தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
வறட்சி, பட்டினி காரணமாக எலிகளை விவசாயிகள் சாப்பிடுவது கடும் வேதனையளிக்கிறது. இந்த அவல நிலைகுறித்தும், வறட்சியை நீக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மத்திய அரசும், தமிழக அரசும்உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில்கூறியுள்ளனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications