கல்லூரியின் பெயரால் நிலத்தை அபகரித்த வழக்கு: நீதிமன்றத்தில் தம்பித்துரை மனு
சென்னை:
ஒசூரில் உள்ள தனது மனைவியின் அதியமான் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரிக்குநில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று மாஜிகல்வி அமைச்சர் தம்பித்துரை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பவர் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தம்பித்துரை மனைவி நடத்தி வரும் அதியமான் கல்லூரிக்கு மட்டும் நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து விலக்குஅளிக்கப்பட்டுள்ளதாக தனது மனுவில் அவர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து கல்வி அமைச்சராக இருந்த தம்பிதுரைக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
டான்சி நிலத்தை சுட்ட வழக்கில் வசமாக மாட்டிக் கொண்டு முழித்து வரும் முதல்வர் ஜெயலலிதா இதனால்கடுப்படைந்தார். இதையடுத்து தம்பிதுரையையும், நிலத்தை ஒதுக்க உதவிய வருவாய்த்துறை அமைச்சர் தளவாய்சுந்தரத்துக்கும் கல்தா கொடுத்தார்.
இதற்கிடையே, தம்பிதுரையின் கல்லூரிக்கு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதிலும் 63 கல்லூரிகளுக்கு இதுபோலஉச்சவரம்புச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அரசு வக்கீல் என்.ஆர்.சந்திரன் நீதிமன்றத்தில்தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அதுதொடர்பான ஆவணங்களை புதன்கிழமை (இன்று) தாக்கல் செய்யுமாறு தலைமை நீதிபதிசுபாஷன் ரெட்டி, நீதிபதி நாகப்பன் ஆகியோர் உத்தரவிட்டிருந்தனர்.
இதையடுத்து இன்று அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தம்பித்துரை சார்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
அதில், நில உச்சவரம்புச் சட்டத்திலிருந்து கல்லூரிகளுக்கு விதி விலக்கு அளிப்பது சாதாரணமான விஷயம்தான்.அதுபோலவே, அதியமான் கல்லூரிக்கும் அளிக்கப்பட்டது.
மேலும் 1987ம் ஆண்டு முதல் அதியமான் கல்லூரி செயல்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 46கல்லுரிகளுக்கும், அதிமுக ஆட்சிக்காலத்தில் 21 கல்லூரிகளுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது.
மேலும், நான் அமைச்சராக இருந்த காலத்தில் அதியமான் கல்லூரிக்கு அமைச்சர் என்ற முறையில் எந்தவிதமானசலுகைகளும் காட்டப்படவில்லை.
கல்வித்துறை தனியார்மயமாக்கல் என்ற அரசின் கொள்கைக்கு அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த வழக்குபாதகமாக அமைந்து விடக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு தம்பிதுரை தனது மனுவில் கூறியுள்ளார்.
இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-->


Click it and Unblock the Notifications
