நக்சல்கள் பயங்கர தாக்குதல் : 18 போலீசார் சாவு
ஜாம்ஷெட்பூர்:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் நக்சலைட் தீவிரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 18 போலீசார் கொல்லப்பட்டனர். 20 பேர்படுகாயமடைந்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சிங்பம் என்ற மாவட்டத்தில் நேற்று காலை இச் சம்பவம் நடந்தது. ஒரிஸ்ஸாவைஒட்டியுள்ள இந்தப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் செல்பாடுகள் அதிகம் உள்ளன.
சமீபத்தில் ஒரிஸ்ஸா போலீஸ் வேனை மாவோயிஸ்டுகள் கண்ணி வெடி வைத்துத் தகர்த்தனர். அதில் பல போலீசார் பலியாயினர்.
முன்னதாக சிங்கம் மாவட்டத்தில் காட்டுப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தலையாரியை நக்சல்கள் சுட்டுக் கொன்றனர். அவரதுஉடல் காட்டுப் பகுதியில் கிடந்தது. இதையடுத்து அந்த உடலை எடுக்க மிக பெரும் படையுடன் போலீசார் சென்றனர்.
காட்டுக்குள் போலீசார் நுழைந்தவுடன் அவர்களை சுமார் 70 தீவிரவாதிகள் சுற்றி வளைத்து சுட்டனர். இதில் 18 போலீசார் அந்தஇடத்திலேயே இறந்தனர். அங்கிருந்த 11 போலீஸ் வாகனங்களுக்கு தீ வைத்தனர்.
பின்னர் இறந்த மற்றும் காயமடைந்த போலீசாரிடமும் இருந்த ஆயுதங்களையும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர். தாக்குதலில் மேலும் 20போலீசார் படுகாயமடைந்தனர். இவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சம்பவம் நேற்று காலை நடந்திருந்தாலும் இன்று தான் அது குறித்த தகவல்கள் வெளியே வர ஆரம்பித்துள்ளன.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications