ஜெ. இன்று டெல்லி பயணம்: அமைச்சர்களுடன் ஆலோசனை
சென்னை:
தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அவசரமாகக் கூடியது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து தமிழக அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
நாளை நடைபெறவுள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று இரவு டெல்லிசெல்கிறார் ஜெயலலிதா. இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்குப் போதிய நிதி ஒதுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக ஏற்கனவேஜெயலலிதா கூறி வருகிறார். இந் நிலையில் ஒவ்வொரு துறைக்கும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்க வேண்டியஉதவிகள் குறித்து விவாதிக்க அனைத்து அமைச்சர்களுடனும் ஜெயலலிதா ஆலோசித்தார்.
மேலும் கர்நாடக, கேரள, பாண்டிச்சேரி முதல்வர்களும் நாளை டெல்லியில் இருப்பார்கள் என்பதால் வரும் 22ம்தேதி காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என்று அதன் தலைவரான பிரதமர் வாஜ்பாயிடம் ஏற்கனவேகோரிக்கை விடுத்துள்ளார் ஜெயலலிதா.
அதே போல வீரப்பன் விவகாரம் தொடர்பாகவும் அன்றைய தினமே தமிழக, கர்நாடக, கேரள முதல்வர்களுடன்வாஜ்பாய் ஆலோசனை நடத்த வேண்டும் என கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் கோரியுள்ளார்.
இந்தக் கூட்டங்கள் நடந்தால் தமிழக அரசு என்ன நிலை எடுப்பது என்பது குறித்தும் அமைச்சர்களுடன்ஜெயலலிதா பேசுவார்.
ஆனால், ஞாயிற்றுக்கிழமை குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதையடுத்து பிரதமர்வாஜ்பாயும் துணைப் பிரதமர் அத்வானியும் காந்தி நகர் செல்ல உள்ளதால் இந்தக் கூட்டங்கள் நடக்குமா என்பதுசந்தேகமே.
மேலும் டான்சி நிலபேர ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பு வழங்கவுள்ளதால் அது குறித்தும்இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஜெயலலிதாவுடன் நிதியமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மற்றும் நிதித்துறைசெயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் டெல்லி செல்கின்றனர்.
-->
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications