இறந்தவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

ஹைதராபாத்-பெங்களூர் ரயில் விபத்தில் இறந்தவர்களின் பெயர்களைக் கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விபத்தில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அன்-ரிசர்வ்ட் பெட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது விவரங்கள்கிடைப்பது சிரமமாக உள்ளது.

இதுவரை ஒருவர் பெயர் மட்டுமே அடையாளம் தெரிந்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கட்நாராயணா என்பவர்மட்டுமே இறந்தவர்களில் அடையாளம் தெரிந்துள்ளது. முன்னதாக பெங்களூரைச் சேர்ந்த மோகன்குமார் என்பவர்இறந்துவிட்டதாக தகவல் வந்தது. ஆனால், அவர் உயிருடன் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டார். இதனால் அவரது வீட்டினர்ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி அடைந்தனர்.

விபத்தில் பலியான மற்றவர்களின் அடையாளம் இதுவரை தெரியவில்லை.

விபத்தில் சிக்கிய பயணிகளின் உறவினர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்தும் ஒரு ரயில் இன்றுகாலை புறப்பட்டுச் சென்றது. ஆந்திர மாநிலம் குண்டக்கல்லில் இருந்தும் ஒரு ரயில் சம்பவ இடத்துக்குச் செல்ல உள்ளது.காலையில் சென்ற ரயில் அங்கு நின்றிருந்த பயணிகளை அழைத்துக் கொண்டு பெங்களூர் வந்துவிட்டது.

கிருஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காரணமாக விபத்தில் சிக்கிய இந்த ரயிலில் நேற்று கூட்டம் நிரம்பி வழிந்தது. விபத்துநள்ளிரவு 12.40க்கு நடந்தபோது பெரும்பாலான பயணிகள் ஆழந்த உறக்கத்தில் இருந்தனர். கும்மிருட்டாக இருந்ததால் மீட்புப்பணிகள் காலையில் தான் துரிதமடைந்தன.

இந்த ரயிலில் பயணம் செய்த ஆந்திர மாநில கல்வி அமைச்சர் ஆஞ்சநேயலு உயிர் தப்பிவிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் நள்ளிரவிலேயே மத்திய ரயில்வே அமைச்சர் நிதிஷ் குமாரும் இணையமைச்சர் பண்டாருதத்தாத்ரேயாவும் டெல்லியில் இருந்து கிளம்பிவிட்டனர். சிறப்பு விமானத்தில் அவர்கள் ஹைதராாத் வந்த அவர்கள், அங்கிருந்துசம்பவ இடத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

தடம் புரண்ட பெட்டிகளில் பின்னால் இருந்த ஒரு ஏ.சி. பெட்டியும் அடங்கும். இதுவரை மீடகப்பட்ட காயமடைந்தவர்களில் 10பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+