ஒரு பயணியின் அனுபவம்
பெங்களூர்:
ரயில் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த பயணி ஒருவர் தனது அதிர்ச்சிகரமான அனுபவத்தை நமது இன்டியா இன்போ நிருபரிடம்தெரிவித்தனர்.
விபத்தில் சிக்கிய ரயிலில் இருந்த பயணிகள் சம்பவ இடத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் பெங்களூர் மற்றும்ஹைதரபாத்துக்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.
விபத்தில் சிக்கிய ரயிலின் ஏ.சி. கம்பார்ட்மென்டில் இருந்த ஜெயந்தி ரகு என்ற பயணி நமது நிருபரிடம் கூறுகையில்,
நள்ளிரவு 12.35 மணி இருக்கும். திடீரென மிகப் பெரிய வேகத்தில் எங்கள் பெட்டி குதித்தது. பெரும் சத்தத்துடன் பெட்டிதரையில் மோதியது. திடீரென ரயில் பிரேக் போட்டதால் தான் ஏதோ நடந்துவிட்டதாகக் கருதினோம். ஆனால், அடுத்தநிமிடத்தில் அழுகுரல்களும் ஓலங்களும் கேட்டன.
வெளியே எட்டிப் பார்த்தால் ஒரே கும் இருட்டு. எதுவும் தென்படவில்லை. பயணிகளின் சத்தம் தான் கேட்டது.
ரயில்வே அதிகாரிகள் சிறிது நேரத்தில் அங்கு வந்துவிட்டார்கள். ஒரு பெட்டி தடம் புரண்டுவிட்டதாகச் சொன்னார்கள். அதைகிரேன் மூலம் அகற்றிவிட்டு சில மணி நேரத்தில் ரயில் புறப்படும் என்றார்கள். பெட்டியைவிட்டு வெளியே வர வேண்டாம் எனஎச்சரித்துவிட்டு சென்றார்கள்.
விபத்தின் குரூரம் குறித்துச் சொன்னால் வயதான பயணிகள் அச்சப்படுவார்கள் என்பதால் அனைவரையும் அமைதியாகஇருக்குமாறு கூறிவிட்டுச் சென்றனர்.
விடிந்த பிறகு காலை 6 மணி வாக்கில் தான் நாம் சந்தித்தது மிக மிக பெரிய விபத்து என்பதே புரிந்தது.
ஒரு பயணியிடம் செல்போன் இருந்தது. ஆனால், அந்த இடத்தில் சிக்னல் கிடைக்கவில்லை. செல்போனை எடுத்துக் கொண்டுசிக்னல் கிடைக்கும் இடம் வரை பல கி.மீ. தூரம் நடந்தேன். அதன் பின்னர் எனது கணவருக்கு நான் நலமுடன் இருப்பதைத்தெரிவித்தேன்.
ஆனால், ரயில்வே மற்றும் தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே தொலைபேசி சேவையை ஏற்படுத்தித்தந்து பயணிகளுக்கு உதவினர்.
காயமடைந்தவர்களுக்கு பெட்சீட் வேண்டும், டாக்டர் வேண்டும் என்று பலரும் குரல் எழுப்பிக் கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தனர். ஏ.சி. கம்பார்ட்மெண்டில் இருந்த பெட்சீட்களை எடுத்துத் தந்தேன். இது மாதிரி பலரும் ஒருவருக்கு ஒருவர்உதவிக் கொண்டோம்.
மிகவும் அதிர்ச்சியான அனுபவம் இது என்றார் கண்களில் இன்னும் மிரட்சி நீங்காமல்.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications