பூமிக்குள் புதைந்த வயல்கள்.. விவசாயிகள் பீதி
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள சில கிராமங்களில் திடீரென்று வயல்கள் பூமிக்குள் புதைந்ததால் பெரும் பரபரப்புஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி பகுதியில் கடந்த சில மாதங்களாக நல்ல மழை பெய்து தற்போதுதான் ஓய்ந்துள்ளது. இதையடுத்துவிவசாயிகள் நெல் நடவை ஆரம்பித்துள்ளனர். இந் நிலையில், சில இடங்களில் நெற் பயிற்கள் பயிரிடப்பட்டுள்ளவயல்கள், சில அடி கீழே இறங்கியுள்ளன.
இது விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அத்திமரப்பட்டி, குள்ளக்காடு, முத்தையாபுரம் ஆகிய கிராமங்களில் நெல் வயல்கள் 10 மீட்டர் அளவுக்குமண்ணுக்குள் இறங்கியுள்ளன.
சிறிய அளவில் பூகம்பம் ஏற்பட்ட காரணமாகவே நெல் வயல்கள் தரைக்குள் இறங்கியிருப்பதாக விவசாயிகள்கூறுகின்றனர். ஆனால், நிலநடுக்கம் ஏதும் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையங்களிலும் பதிவாகவில்லை.
இதனால் பல பகுதிகளில் நெல் நடவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வயல் பக்கம் போகவே விவசாயிகள்அச்சப்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தப் பகுதியில் மின் கம்பங்கள் மண்ணில் புதைந்து வந்தன. இதையடுத்து புவியியல் வல்லுனர்களைக் கொண்டுமத்திய, மாநில அரசுகள் ஆய்வு நடத்தின. ஆய்வு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந் நிலையில் வயல்களே பூமிக்குள் புதைந்துள்ளது இப் பகுதியில் படிப்பறிவில்லாத ஏழை விவசாயிகளிடையேபீதியை உருவாக்கியுள்ளது.
-->
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications