சட்டசபை கூட்டத் தொடரை முடித்து வைத்தார் ஆளுநர்
சென்னை:
தமிழக சட்டசபையின் நடப்பு ஆண்டுக்கான கூட்டத் தொடரை ஆளுநர் ராமமோகன் ராவ் முறைப்படி முடித்துவைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன்தான் தொடங்கும். அதன் பிறகுஆண்டு இறுதியில் கூட்டத் தொடரை ஆளுநரே முடித்து வைப்பார்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான சட்டசபை கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி ஆளுநர் உரையுடன்தொடங்கியது. ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்வரான பின் கூடியமுதல் சட்டசபைத் தொடர் அது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் சில முறை சட்டசபை கூடியது. சமீபத்தில் மழைக்காலக் கூட்டத் தொடரும் நடந்து முடிந்து விட்டது.இந்நிலையில் இந்த ஆண்டும் இன்னும் ஒரு வாரத்தில் முடிவடைகிறது.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான சட்டசபைக் கூட்டத் தொடரை ஆளுநர் முறைப்படி முடித்து வைத்துள்ளதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் முதல் கூட்டத் தொடரும் ஆளுநர் உரையுடன்தான் தொடங்கும்.
-->












Click it and Unblock the Notifications