தமிழக ரயில் நிலையங்களைத் தகர்ப்போம்: அல்-உம்மா மிரட்டல்
சென்னை:
கோயம்புத்தூர் போலீசார் செல்வராஜ் கொலை வழக்கில் 4 அல்-உம்மா இயக்கத் தீவிரவாதிகளுக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக ரயில் நிலையங்களை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகமிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கடந்த 1997ல் செல்வராஜ் படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பை சமீபத்தில்கோயம்புத்தூர் விரைவு நீதிமன்றம் வழங்கியது.
அல்-உம்மாவைச் சேர்ந்த முகமது ஷபி, ஆசிக், அப்பாஸ் மற்றும் அபுதாகீர் ஆகிய நான்கு தீவிரவாதிகளுக்கும்தூக்கு தண்டனை விதித்து நீதிபதி பிரேம்குமார் தீர்ப்பளித்தார். வேறு நான்கு பேருக்கு ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை ரயில்வே கோட்ட மேலாளருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களையும் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம் என்று அந்தக் கடிதத்தில்கூறப்பட்டுள்ளதாக ரயில்வே போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையடுத்து அனைத்து ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளுக்கு எந்தவிதஇடைஞ்சலும் தராமல் அவ்வப்போது வெடிகுண்டு இருக்கிறதா என்றும் ரயில் நிலையங்களில் போலீசார் சோதனைசெய்து வருகின்றனர்.
மேலும் அனைத்து ரயில்களிலும் கூட பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ரயிலிலும்பாதுகாப்புக்காக ஆயுதமேந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
பரபரப்பூட்டிய துண்டுப் பிரசுரங்கள்:
இதற்கிடையே ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில், அல்-உம்மா தீவிரவாதிகளுக்கு தண்டனைவிதிக்கப்பட்டதைக் கண்டித்து துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.
தமிழில் எழுதப்பட்டிருந்த அந்த துண்டுப் பிரசுரங்களில், நான்கு பேரை வேண்டுமானால் தூக்கில் போடலாம்.ஆனால் 4,000 இஸ்லாமிய இளைஞர்கள் எழுச்சியுடன் வீறுகொண்டு எழுந்து சிறுபான்மையினருக்காகப்போராடுவார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.
துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்துபோலீஸார் விசாரணை நடத்தி இவற்றை விநியோகித்தவர்களைத் தேடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications