சென்னை வந்தார் "போலாரிஸ்" அதிபர்
சென்னை:
இந்தோனேஷியாவில் கைதாகி விடுதலையான "போலாரிஸ்" சாப்ட்வேர் நிறுவன அதிபர் அருண் ஜெயின் நேற்றுஇரவு சென்னை வந்து சேர்ந்தார்.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட "போலாரிஸ்" நிறுவனத்துக்கும் இந்தோனேஷியாவில் உள்ள ஆர்த்தாகிரஹா வங்கிக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஜெயினையும், அந்நிறுவனத்தின் மூத்தஅதிகாரியான ராஜிவ் மல்ஹோத்ராவும் ஜகார்தா போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இந்திய அரசு தலையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் கடந்த 20ம் தேதி இந்தோனேஷியாபோலீசார் விடுதலை செய்தனர். ஆனால் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகளைத் திரும்ப ஒப்படைப்பதில் சிக்கல்நீடித்தது.
இதையடுத்து ஜகார்தாவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்திலேயே அவர்கள் இருவரும் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் நேற்று ஒருவழியாக ஜெயினிடமும், மல்ஹோத்ராவிடமும் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகள்ஒப்படைக்கப்பட்டன.
இதையடுத்து நேற்று இரவே அவர்கள் இருவரும் சென்னை கிளம்பி வந்தனர். அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ஒருவர் எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் அவரை எந்த அளவுக்கு நம்பலாம் என்ற பாடத்தை நான்நன்றாகக் கற்றுக் கொண்டேன்.
அதற்காக இந்தோனேஷியாவில் எங்களுடைய பிசினஸ் நடவடிக்கைகளை நிறுத்திவிட மாட்டோம்.
உலகிலேயே நான்காவது பெரிய நாடான இந்தோனேஷியாவை அவ்வளவு எளிதாக நாம் நினைத்துவிடக்கூடாது.
அடுத்த ஒரு சில மாதங்களுக்கு வேண்டுமானால் அந்நாட்டு கம்பெனிகளுடன் பிசினஸ் வைத்துக் கொள்ளாமல்இருப்போம்.
இவ்வளவும் நடந்ததற்காகப் பயந்து போய் கிரஹா வங்கியிடம் அடிபணிந்து போய் விடவும் மாட்டோம்.எங்களைக் கைது செய்த இந்தோனேஷிய போலீசாருக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ளோம் என்றார் ஜெயின்.
-->
-
ஆயிரம் பாதுகாப்பு கொடுத்தாலும்.. 'இது' மட்டும் குறையவேயில்லை.. RBI வெளியிட்ட பகீர் ரிப்போர்ட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications