கர்நாடகத்தில் 20 பாஜக எம்.எல்.ஏக்கள் கைது
பெங்களூர்:
கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் சாவுக்குப் பொறுப்பேற்று முதல்வர் கிருஷ்ணா ராஜினாமா செய்யவேண்டும் என்று கோரி சட்டசபை முன் தர்ணாவில் இறங்கிய 20 பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்ட நாகப்பா கடந்த 8ம் தேதி மார்பில் குண்டு பாய்ந்த நிலையில்பிணமாகத்தான் மீட்கப்பட்டார். அவரைக் கொன்றது யார் என்ற மர்மம் இன்னும் நீடிக்கிறது.
நாகப்பா மரணம் தொடர்பாக விவாதிப்பதற்காக கடந்த 23ம் தேதி முதல் கர்நாடக சட்டசபையின் சிறப்புக் கூட்டம்நடந்து வருகிறது. கூட்டம் தொடங்கிய நாளிலிருந்தே பா.ஜ.க. உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர்சட்டசபைக்குள் கடுமையான ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நடந்த கூட்டத்தின் போதும் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் கடும் ரகளையில் ஈடுபட்டதைத் தொடர்ந்து,அவர்களை இந்தத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய சபாநாயகர் உத்தரவிட்டார்.
இருந்தாலும் கிருஷ்ணா அரசுக்கு எதிராக பா.ஜ.கவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்றுவிதான செளதாவுக்கு முன்பாக திடீர் தர்ணா போராட்டத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டனர்.
கிருஷ்ணா பதவி விலகும் வரை ஓயப் போவதில்லை. தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று அவர்கள்அப்போது கோஷம் போட்டனர்.
இதையடுத்து 20 பா.ஜ.க. எம்.எல்.ஏக்களைப் போலீசார் கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்திலேயே அவர்கள்அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சட்டசபையிலிருந்து தாங்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை எந்தவிதமான முன்நிபந்தனையும் இன்றி வாபஸ் பெற வேண்டும் என்று சபாநாயகரை பா.ஜ.க. தலைவரான ஜெகதீஷ் சத்தார்வலியுறுத்தியுள்ளார்.
-->
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications