உலகின் முதல் குளோனிங் குழந்தை பிறப்பு
மியாமி:
குளோனிங் முறையில் உலகின் முதல் பெண் குழந்தை பிறந்துள்ளது.
ஆண்- பெண் செக்ஸ் செல்களுக்குப் பதிலாக உடல் செல்லை (stem cell) வைத்தே உயிர்களை உருவாக்குவது தான் குளோனிங்முறை. இந்த முறையில் ஆட்டுக்குட்டி முதல் கன்றுக்குட்டி வரை உயிர்கள் உருவாக்கப்பட்டுவிட்டன.
ஆனால், முதல் மனிதன் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரில் உள்ளகுளோன்எய்ட் ஆராய்ச்சி மையத்தில் இக் குழந்தை நேற்று பிறந்தது.
சிசேரியன் மூலம் தாயிடம் இருந்து இக் குழந்தை பிரசவிக்கப்பட்டது. மிக ரகசியமாக இந்த குளோனிங் ஆராய்ச்சி நடந்து வந்தது.
இந்த ஆராய்ச்சி மையத்தின் தலைவரான பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பாஸ்செல்லியர் என்ற பெண் விஞ்ஞானி தலைமையில் தான்இந்த குளோனிங் குழந்கை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது தொடர்பாக முழு விவரங்களை அளிக்க பாஸ்செல்லியர்மறுத்துவிட்டார்.
குளோனிங் மூலம் உயிர்களை உருவாக்குவது சரியா தவறா என்று உலக அளவில் பெரும் சர்ச்சை நடந்து வரும் நிலையில் இந்தக்குழந்தை உருவாக்கப்பட்டிருப்பது சர்ச்சையை மேலும் தூண்டும் என்று கருதப்படுகிறது.
ஆண், பெண் என உயிர்கள் இணைந்து உயிர்களை உருவாக்குவது தான் மரபு. அதை மீறி ஒரு உயிரிடம் இருந்தே இன்னொருஉயிரை நேரடியாக உருவாக்குவது மருத்துவ மற்றும் உலகியல் நியதிகளுக்கு எதிரானது என்று பல அமைப்புகளும் குற்றம் சாட்டிவருகின்றன.
நேற்று பிறந்த இக் குழந்தை தாயின் செல்லில் இருந்தே உருவாக்கப்பட்டுள்ளது. இது தனது தாயைப் போன்ற குணாதிசயமும்,உடல் அமைப்பும் கொண்டதாக வளரும் என்று கருதப்படுகிறது. இக் குழந்தை பிறப்பில் இங்கு ஆண் செல் ஏதும்பயன்படுத்தபடவே இல்லை. பதிலாக அந்தத் தாயின் உடல் செல்லில் டி.என்.ஏ. மாறுதல்களை (DNA reprogramming) ஏற்படச்செய்து அதை கருவாக மாற்றி அதை கருப்பையில் வைத்து வளரச் செய்து குழந்தையாக்கியுள்ளனர்.
இந்த சாதனையைச் செய்துள்ள குளோன்எய்ட் மருத்துவமனை ரேலியன்ஸ் என்ற பிரிவினரால் நடத்தப்பட்டு வருகிறது. பூமிக்குஉயிர்களைக் கொண்டு வந்ததே வேற்றுகிரகவாசிகள் என்ற தத்துவத்தில் நம்பிக்கை கொண்டது இந்தப் பிரிவு. 25,000ஆண்டுகளுக்கு முன் விண் தட்டில் வந்திறங்கிய வேற்றுகிரகவாசிகள் குளோனிங் முறையில் தான் மனிதனை பூமியில்உருவாக்கிவிட்டுச் சென்றதாக இந்த அமைப்பு கூறுகிறது. ஒரு மத அமைப்பைப் போலவே நடந்து வரும் இந்த அமைப்பில்உலகம் முழுவதும் 55,000 பேர் உறுப்பினராக உள்ளனர்.
குளோனிங் மூலம் தான் மனிதன் அழிவில்லா நிலையை (eternal) அடைய முடியும் என்கிறது இந்த அமைப்பு.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications