அதிமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக போராட்டம்
சென்னன:
அதிமுக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து திமுக சார்பில் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் இன்றுபோராட்டங்கள் நடத்தப்பட்டன.
பஸ்களைத் தனியார்மயமாக்கும் முடிவு, இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் முடிவு, விவசாயிகள் பிரச்சினைஉள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசின் போக்கைக் கண்டித்து இந்தப் போராட்டங்களை திமுகநடத்தியது.
சென்னையில் திமுக இளைஞரணிச் செயலாளரும் முன்னாள் மேயருமான ஸ்டாலின் தலைமையில் இன்று பிற்பகல்போராட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு,அதிமுக அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினார்கள்.
காஞ்சிபுரத்தில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், மதுரையில் முன்னாள் அமைச்சர் துரைமுருகன், சேலத்தில்முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கோயம்புத்தூரில் முன்னாள் அமைச்சர் சுப்புலட்சமி ஜெகதீசன்,வேலூரில் நடிகர் ராஜேந்தர் ஆகியோர் தலைமையில் போராட்டங்கள் நடந்தன.
மதுரையில் பதற்றம்:
மதுரையில் நடைபெறும் போராட்டத்தின்போது ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் தனித் தனியே தங்கள்பலத்தைக் காட்டுவதற்காக முடிவு செய்திருந்ததாக முதலில் கூறப்பட்டது.
இரு தரப்பு ஆதரவாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு போராட்டம் நடத்துவார்கள் என்பதால் மோதல்ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக மதுரையில் ஆயிரக்கணக்கான போலீஸார் போராட்டம் நடந்த இடத்தில்குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனாலும் மதுரையில் மிகவும் அமைதியாகவே போராட்டம் நடந்தது. துரைமுருகன் தலைமையில் மதுரைமாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன் ஆயிரக்கணக்கான திமுகவினர் கூடி நின்று போராட்டம் நடத்தினர்.
ஸ்டாலின் ஆதரவாளர்களும், அழகிரி ஆதரவாளர்களும் ஒன்றாகத் திரண்டதால் போராட்டத்திற்கு வந்த திமுகதொண்டர்களின் கூட்டமும் அதிகம் காணப்பட்டது. அதிமுக அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களைஎழுப்பினார்கள்.
இதேபோல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் இன்று பெரும் போராட்டம் நடத்தினார்கள்.
ஜெ. கின்னஸ் சாதனை: கருணாநிதி கிண்டல்
இதற்கிடையே கிருஷ்ணா நதி நீர், தெலுங்கு-கங்கை திட்டம் குறித்து எந்த ஒரு அதிகாரியும் இல்லாமல் தமிழகமுதல்வர் ஜெயலலிதாவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பேசியிருப்பது ஒரு கின்னஸ் சாதனை என்றுதிமுக தலைவர் கருணாநிதி வர்ணித்தார்.
ஓய்வெடுப்பதற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ள ஜெயலலிதா, நேற்று முன்தினம் திடீரென்று சந்திரபாபுவைஅவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்குத் திறந்து விட நடவடிக்கைஎடுக்குமாறு அப்போது ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
இவர்களின் சந்திப்பு குறித்து கருணாநிதி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலலிதா-சந்திரபாபுசந்திப்பை ஒரு கின்னஸ் சாதனை என்றுதான் கூற வேண்டும்.
மிகவும் முக்கியமான கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தையும், தெலுங்கு-கங்கை திட்டத்தையும் பற்றி எந்த ஒருஅதிகாரியின் துணையும் இன்றி சுமார் இரண்டு மணி நேரம் வரை இருவரும் பேசியுள்ளனர்.
ஒரு அதிகாரியின் உதவி கூட இல்லாமல் அவர்கள் இருவரும் இந்த விவகாரங்கள் குறித்துப் பேசியிருப்பது ஒருகின்னஸ் சாதனைதானே.
மத்தியில் தேசிய ஜனநாயகக் (தே.ஜ.) கூட்டணிதான் ஆட்சியில் உள்ளதே தவிர, பா.ஜ.க. தலைமையிலான ஆட்சிஅங்கு நடக்கவில்லை. அந்தக் கூட்டணியில் பா.ஜ.கவும் ஒரு அங்கம், அவ்வளவுதான்.
தே.ஜ. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுடைய கொள்கைகளைப் பரப்புவதற்கு உரிமை உண்டு.அதில் ஒன்றும் தவறே இல்லை.
ஆனால் முடிவு என்று வரும்போது தே.ஜ. கூட்டணியின் கொள்கை எதுவோ அந்த முடிவுதான் பின்பற்றப்படவேண்டும் என்றார் கருணாநிதி.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும் என்று பா.ஜ.கவின் தேசியச்செயலாளர் இல. கணேசன் கூறியது பற்றிக் கேட்டபோது, அதற்குப் பதிலளிக்க கருணாநிதி மறுத்து விட்டார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனைப் பார்க்க அங்கு செல்வீர்களா என்றுகேட்டபோது, "தினமும் போன் மூலம் அவருடைய உடல்நிலை பற்றி விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.அமெரிக்காவுக்குப் போகும் திட்டம் எதுவும் இல்லை. இன்னும் மூன்று மாதத்தில் மாறன் முழுமையாகக் குணம்அடைந்து விடுவார்" என்றார் கருணாநிதி.
வரும் ஜனவரி 12ம் தேதி திமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது கட்சி நிர்வாகிகள்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications