ஜெ.-சந்திரபாபு சந்திப்பு ஒரு கின்னஸ் சாதனை: கருணாநிதி கிண்டல்
சென்னன:
கிருஷ்ணா நதி நீர், தெலுங்கு-கங்கை திட்டம் குறித்து எந்த ஒரு அதிகாரியும் இல்லாமல் தமிழக முதல்வர்ஜெயலலிதாவும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் பேசியிருப்பது ஒரு கின்னஸ் சாதனை என்று திமுகதலைவர் கருணாநிதி வர்ணித்துள்ளார்.
ஓய்வெடுப்பதற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ள ஜெயலலிதா, நேற்று முன்தினம் திடீரென்று சந்திரபாபுவைஅவருடைய இல்லத்தில் சந்தித்துப் பேசினார். கிருஷ்ணா நதி நீரை தமிழகத்திற்குத் திறந்து விட நடவடிக்கைஎடுக்குமாறு அப்போது ஜெயலலிதா கேட்டுக் கொண்டார்.
இவர்களின் சந்திப்பு குறித்து கருணாநிதி இன்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
ஜெயலலிதா-சந்திரபாபு சந்திப்பை ஒரு கின்னஸ் சாதனை என்றுதான் கூற வேண்டும்.
மிகவும் முக்கியமான கிருஷ்ணா நதி நீர் விவகாரத்தையும், தெலுங்கு-கங்கை திட்டத்தையும் பற்றி எந்த ஒருஅதிகாரியின் துணையும் இன்றி சுமார் இரண்டு மணி நேரம் வரை இருவரும் பேசியுள்ளனர்.
ஒரு அதிகாரியின் உதவி கூட இல்லாமல் அவர்கள் இருவரும் இந்த விவகாரங்கள் குறித்துப் பேசியிருப்பது ஒருகின்னஸ் சாதனைதானே என்றார் கருணாநிதி. அவர் மேலும் கூறுகையில்,
மத்தியில் தேசிய ஜனநாயகக் (தே.ஜ.) கூட்டணிதான் ஆட்சியில் உள்ளதே தவிர, பா.ஜ.க. தலைமையிலானகூட்டணி ஆட்சி அங்கு நடக்கவில்லை. அந்தக் கூட்டணியில் பா.ஜ.கவும் ஒரு அங்கம், அவ்வளவுதான்.
தே.ஜ. கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுடைய கொள்கைகளைப் பரப்புவதற்கு உரிமை உண்டு.அதில் ஒன்றும் தவறே இல்லை.
ஆனால் முடிவு என்று வரும்போது தே.ஜ. கூட்டணியின் கொள்கை எதுவோ அந்த முடிவுதான் பின்பற்றப்படவேண்டும் என்றார் கருணாநிதி.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் கூட்டணிகளில் மாற்றம் ஏற்படும் என்று பா.ஜ.கவின் தேசியச்செயலாளர் இல. கணேசன் கூறியது பற்றிக் கேட்டபோது, அதற்குப் பதிலளிக்க கருணாநிதி மறுத்து விட்டார்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் முரசொலி மாறனைப் பார்க்க அங்கு செல்வீர்களா என்றுகேட்டபோது, "தினமும் போன் மூலம் அவருடைய உடல்நிலை பற்றி விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.அமெரிக்காவுக்குப் போகும் திட்டம் எதுவும் இல்லை. இன்னும் மூன்று மாதத்தில் மாறன் முழுமையாகக் குணம்அடைந்து விடுவார்" என்றார் கருணாநிதி.
வரும் ஜனவரி 12ம் தேதி திமுகவின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும், அப்போது கட்சி நிர்வாகிகள்தேர்தல் நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் கருணாநிதி தெரிவித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications