புலிகளுக்கு இலங்கை ராணுவம் திடீர் நிபந்தனை
கொழும்பு:
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்க வேண்டுமென்றால், விடுதலைப்புலிகள்ஆயுதங்களைக் கீழே போட வேண்டும் என்று இலங்கை ராணுவம் திடீர் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால் புலிகள்இதைக் கடுமையாக எதிர்த்துள்ளனர்.
மேலும் வடக்கு, கிழக்கு இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள தங்கள் முகாம்களை புலிகள் கலைத்துவிட வேண்டும்என்றும் யாழ்ப்பாணத் தீபகற்பப் பகுதி ராணுவ தளபதி சரத் பொன்சேகரா கூறியிருந்தார்.
ஆனால் இதுபோன்ற நிபந்தனைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று கூறி புலிகள் இது தொடர்பான ஒருஅறிக்கையையும் வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையில்,
தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுக்களை ராணுவம் விரும்பவில்லை என்பது எங்களுக்கு நன்றாகவேதெரியும்.
இந்த அமைதிப் பேச்சைக் குலைக்கும் விதமாகவே ராணுவம் இதுபோன்ற நிபந்தனைகளை விதிக்கிறது.
தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் இடைஞ்சல்களைத்தவிர்ப்பதற்காக ராணுவத்தினர் விதித்திருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்றுபேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஆனால் ராணுவம் அதை ஏற்றுக் கொள்ளாமல், உடன்பாட்டிலேயே இல்லாத நிபந்தனைகளைத் தற்போதுவிதித்துள்ளது. இதை ஏற்க முடியாது.
இந்நிலைமை நீடித்தால் மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும் என்று அவ்வறிக்கையில் புலிகள்எச்சரித்துள்ளனர்.
இந்தப் புதிய விவகாரம் தொடர்பாக இலங்கை அரசு தரப்பில் இதுவரை ஒன்றும் பதிலில்லை.
இதற்கிடையே போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இன்று இலங்கை அரசு தரப்பினரையும், புலிகள்தரப்பினரையும் தனித் தனியாகச் சந்தித்து இதுகுறித்துப் பேசினர்.
பேச்சுவார்த்தை முயற்சிகள் மிகவும் சுமூகமாகப் போய்க் கொண்டிருப்பதால் இலங்கை ராணுவத்தினரும்,புலிகளும் அமைதியாக இருக்க வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications