மதுரை அருகே 2,500 ஆண்டு பழைய முதுமக்கள் தாழிகள்" கண்டெடுப்பு
திருமங்கலம்:
மதுரை அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக பூமியைத் தோண்டியபோது அங்கிருந்து 2,500 வயதுடைய 3"முதுமக்கள் தாழிகள்" கண்டெடுக்கப்பட்டன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மம்சாபுரம் கிராமத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சிலதொழிலாளர்கள் பூமியைத் தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது "டங் டங்"கென்று சத்தம் கேட்கவே, மிகுந்த எச்சரிக்கையுடன் தரையைத் தோண்டிய அந்தத்தொழிலாளர்கள் அங்கு ஒரு பெரிய தாழி கிடப்பதைப் பார்த்து ஆச்சரியமடைந்தனர்.
இதையடுத்து அவர்கள் மேலும் தோண்ட ஆரம்பித்தனர். அவர்கள் நினைத்தது போலவே மேலும் இரண்டுதாழிகள் தென்பட்டன.
இதைத் தொடர்ந்து மதுரை அருங்காட்சியகத்திற்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அருங்காட்சியகஅதிகாரிகளும் உடனடியாக மம்சாபுரம் விரைந்தனர். அனைவரும் சேர்ந்து அந்தத் தாழிகளை மேலேகொண்டுவந்தனர்.
அந்தக் காலத்தில் இதுபோன்ற தாழிகளுக்குள் நெல் மற்றும் உணவுத் தானியங்களைப் பொதுமக்கள் கொட்டிவைத்திருப்பது வழக்கம்.
மேலும் யாராவது இறந்தால் அவருடைய சாம்பல் மற்றும் அவருக்குப் பிடித்தமான பொருள்களை அவருடையகுடும்பத்தினர் ஒரு தாழிக்குள் வைத்து மண்ணுக்குள் புதைத்து விடுவதையும் நம் முன்னோர்கள் வழக்கமாகக்கொண்டிருந்தனர்.
இவ்வாறு இறந்தவர்களின் நினைவாகப் புதைக்கப்படும் தாழிகளுக்குத்தான் "முதுமக்கள் தாழி" என்று பெயர்.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மூன்று தாழிகளில் சில எலும்புத் துண்டுகளும் கிடைத்தன. அவை அநேகமாகஇறந்து போனவர்களின் எலும்புகளாகத்தான் இருக்கும் என்று மதுரை அருங்காட்சியக அதிகாரியானசாந்தாலிங்கம் தெரிவித்தார்.
மேலும் இந்த மூன்று தாழிகளிலும் மாலை போன்ற ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. அந்தக்காலத்தில்பிரபலமாக இருந்தவர்களின் (வி.ஐ.பிக்கள்) நினைவாகப் புதைக்கப்படும் தாழிகளில்தான் இதுபோன்ற மாலைஓவியங்கள் வரையப்பட்டிருக்கும் என்று சாந்தாலிங்கம் விளக்கமளித்தார்.
இறந்தவர் ஒரு பெரும் போர் வீரராக இருந்தால், அவருக்காகப் புதைக்கப்படும் தாழிகளில் அவருடைய சாம்பல்,எலும்பு, அவர் விரும்பும் பொருட்கள் மட்டுமல்லாமல் அவர் பயன்படுத்திய வில், வாள், ஈட்டி போன்ற போர்க்கருவிகளும் வைத்துப் புதைக்கப்படும் என்றும் கூடுதலாக ஒரு தகவலைக் கூறினார் சாந்தாலிங்கம்.
மம்சாபுரம் பகுதிகளில் மேலும் சில தாழிகள் கிடைக்கும் என்று நம்பும் மதுரை அருங்காட்சியக அதிகாரிகள்அங்கேயே முகாமிட்டுள்ளனர். மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பிரம்மாண்டமான அளவில் பூமியைத்தோண்டி ஆராய முடிவு செய்துள்ளனர்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications