"வாஸ்து"வை உரிமையாக்கியஜெர்மனி நிறுவனம்
டெல்லி:
இந்தியர்கள் வீடு கட்டுவதற்கு நம்பிக்கையுடன் பயன்படுத்தும் "வாஸ்து" என்ற பெயரை ஜெர்மனி நிறுவனம் ஒன்றுதன்னுடைய டிரேட்மார்க்காகப் பதிவு செய்துள்ளது.
ஏராளமான மக்கள் ஏற்கனவே கட்டிய கட்டடங்களை "வாஸ்து"க்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்துஇடித்தும், மாற்றி அமைப்பதும் கூட உண்டு. அந்த அளவுக்கு "வாஸ்து" நம்பிக்கை அனைவரிடமும் புரையோடிப்போயுள்ளது.
இவ்வாறு இந்தியாவின் பாரம்பரியத்தில் மூழ்கிப் போன "வாஸ்து" என்ற பெயரை ஜெர்மனியைச் சேர்ந்த சம்ஹிதாஎன்ற நிறுவனம்தான் தன்னுடைய அகாடமிக்கு "வாஸ்து அகாடமி" என்ற பெயரைப் பதிவு செய்தது.
அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே அந்தக் கம்பெனி இந்தப் பெயரைப் பதிவு செய்து விட்டதாகத்தெரிகிறது.
ஜெர்மனியைச் சேர்ந்த வாஸ்து நிபுணரான மார்க்கஸ் ஸ்மியேக் என்பவர்தான் இந்திய வாஸ்து சாஸ்திரநிறுவனத்தின் இயக்குநரான அஸ்வினி பன்சாலிடம் இத்தகவலைத் தெரிவித்தார்.
ஆனாலும் அந்த அகாடமி பின்னர் தன் பெயரை "வாஸாதி அகாடமி" என்று மாற்றிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
உலக வர்த்தக சபை விதிமுறைகளின் படி "வாஸ்து" என்ற பெயரை மற்ற எந்த நிறுவனமும் தன் வியாபாரநோக்கத்துக்காகப் பயன்படுத்த முடியாது.
ஆனால் இதையும் மீறி அந்த ஜெர்மனி நிறுவனம் எப்படி "வாஸ்து" பெயரைப் பதிவு செய்தது என்பது குறித்துசட்டரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக பன்சால் நிருபர்களிடம் கூறினார்.
இந்தியாவிற்கே சொந்தமான பாஸ்மதி அரிசி, வேம்பு, மஞ்சள் போன்ற பொருட்களை அமெரிக்கா உள்ளிட்டநாடுகள் ஏற்கனவே "பேடன்ட்" (காப்புரிமை) செய்து விட்ட நிலையில் "வாஸ்து" என்ற பெயரும் பறிபோய்விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ரிக் வேத காலத்திலேயே "வாஸ்து" என்ற பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளதாக பன்சால் நிருபர்களிடம் தெரிவித்தார்.
-->
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications