தலித்களை கோவிலுக்குள் விடும் விவகாரம்: சங்கராச்சாரியார் மீது புதிய தமிழகம் வழக்கு
சென்னை:
காஞ்சி சங்கராச்சாரியார் மீது புதிய தமிழகம் கட்சியின் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தலித்களை சங்கராச்சாரியார் தரக் குறையாவகப் பேசியதாகவும் அதற்காக அவர் மன்னிப்பு கோராவிட்டால் வழக்குத்தொடரப்படும் என்றும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எச்சரித்திருந்தார்.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து சங்கராச்சாரியார் மீது வழக்குப் போடப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்புதிய தமிழகம் கட்சியின் பொதுச் செயலாளர் துரைசாமி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். தனது மனுவில் அவர்கூறியிருப்பதாவது:
தலித் என்ற பெயரில் கோவிலுக்குள் வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆதிதிராவிடர் அல்லது தாழ்த்தப்பட்டவர்கள்என்ற பெயரில் வந்தால் தான் அனுமதிப்போம் என்றும் கூறியுள்ளார்.
கோவிலுக்குள் நுழைவதை அனுமதிக்கவும் மறுக்கவும் அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை. அப்படி இருக்கும்போது தலித்என்று வராதே, ஆதி திராவிடன் என்ற அடைமொழியுடன் வா, அப்போது தான் கோவிலுக்குள் விடுவேன் என்று இவர்பேசியிருப்பது இந்திய அரசியல் சாசனத்துக்கே எதிரானது.
இந்திய அரசியல் சாசனத்தை அவமதித்த சங்கராச்சாரியார் மீது நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி ரவீந்திரதாஸ் வரும் ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.
-->
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications