நாகப்பா மரணம்: 15 நாட்களில் விசாரணைக் கமிஷன் அறிக்கை சமர்பிக்கும்
சென்னை:
நாகப்பாவின் மர்மச் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் 15 நாட்களில் தனது அறிக்கையை சமர்பிக்கஉள்ளது.
இத் தகவலை கர்நாடக செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் காகோடு திம்மப்பா சென்னையில் தெரிவித்தார். உடல் நலம்பாதிக்கப்பட்டு அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வரும் பழம்பெரும் நடிகை பண்டரிபாயைச் சந்திக்க அவர் சென்னை வந்தார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த பண்டரிபாய்க்கு தேவையான மருத்துவ உதவிகளை முதல்வர் ஜெயலலிதா செய்து வருவதுகுறிப்பிடத்தக்கது. இந் நிலையில் பண்டரிபாய்க்கு கர்நாடக அரசும் உதவ வேண்டும் என கர்நாடக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து அவரைப் பார்க்க அமைச்சர் திம்மப்பாவை கர்நாடக அரசு அனுப்பி வைத்துள்ளது. அவரும் கர்நாடக திரைப்படவளர்ச்சி வாரியத்தின் நிர்வாக இயக்குனர் விசுகுமாரும் அப்பல்லோ மருத்துவமனையில் பண்டரிபாயைச் சந்தித்து உடல் நலம்விசாரித்தனர்.
73 வயதான பண்டரிபாய் சர்க்கரை நோயாலும், சிறுநீரக நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மருத்துவ செலவைஅண்ணா அறக்கட்டளை ஏற்கும் என ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
பண்டரிபாயை சந்தித்த பின்னர் நிருபர்களிடம் பேசிய திம்மப்பா,
வீரப்பனைப் பிடிக்க எல்லா முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. மத்திய அரசும் ஒத்துழைப்பு தந்து வருகிறது.நாகப்பாவின் மரணத்தில் பின்னணி குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷன் 15 நாட்களுக்குள் தனது அறிக்கையைஒப்படைத்துவிடும் என்றார்.
-->
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications