வீரப்பனை எங்களால் பிடிக்க முடியும்: சி.ஆர்.பி.எப். சவால்
டெல்லி:
காட்டுப் பகுதியில் கொள்ளையர்களைப் பிடிப்பதில் தேர்ச்சியும் அனுபவமும் உள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினால்வீரப்பனைப் பிடிக்க முடியும் என அந்தப் படையின் டைரக்டர் ஜெனரல் திரநாத் மிஸ்ரா கூறியுள்ளார்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர்,
வீரப்பனைப் பிடிக்கும் பணி எங்களிடம் ஒப்படைக்கப்பட்டால் அதைச் செய்து காட்டுவோம். அதற்கான திறமையும்ஆயுதங்களும் எனது படையினரிடம் உண்டு.
முதலில் எங்களை காட்டுக்குள் போய் வீரப்பனைப் பிடிக்கச் சொன்னார்கள். ஆனால், தமிழக, கர்நாடக அதிரடிப்படையினர்எங்களை காட்டுக்கு வெளியில் தேடுதல் வேட்டை நடத்தச் சொன்னார்கள். அங்கு தேடுவது வெட்டிச் செயல் என்பதால்படையினரை திரும்ப அழைத்துவிட்டோம்.
எங்களிடம் அந்தப் பணியை முழுமையாக ஒப்படைத்தால் வீரப்பனை பிடித்துக் காட்டுவோம். நாட்டின் எத்தனையோ காடுகளில்பதுங்கிய தீவிரவாதிகள், கொள்ளையர்களை விரட்டி விரட்டி பிடித்துள்ளது மத்திய ரிசர்வ் போலீஸ் படை.
அதே நேரம் தமிழக, கர்நாடக அதிரடிப் படைகளின் திறமையையும் குறைத்து மதிப்பிடக் கூடாது. 150 பேர் கொண்டகும்பலுடன் திரிந்து வந்த வீரப்பனுடன் இன்று வெறும் 6 பேர் மட்டுமே உள்ளனர். இதற்குக் காரணம் அவனது கும்பலைச்சேர்ந்தவர்களை இரு மாநில அதிரடிப்படையினரும் விரட்டி விரட்டி கொன்றது தான். இந்த 5 பேரையும் கூட ஒழித்துக் கட்ட இருமாநிலப் படைகளால் முடியும்.
ஜம்மூ-காஷ்மீரில் ரகுநாத் கோவிலின் மீது முதலில் தாக்குதல் நடந்தவுடனேயே நாங்கள் சில யோசனைகளைச் சொன்னோம்.கோவிலுக்குள் நுழையும் பாதையை ஒருவழிப் பாதையாக்கச் சொன்னோம். அதை நிர்வாகம் காதில் வாங்கவே இல்லை.அனைத்து பாதுகாப்பு யோசனைகளையும் குப்பையில் போட்டார்கள். இதனால் தான் இரண்டாவது முறையாக கோவிலில்தாக்குதல் நடந்தது.
அதே போல காஷ்மீரில் மனித வெடிகுண்டுகளை வைத்து நடத்தப்படும் தாக்குதல்களை சமாளிக்க வேண்டிய புதிய அவசியம்பாதுகாப்புப் படையினருக்கு ஏற்பட்டுள்ளது. இது போன்ற தற்கொலைப் படைத் தீவிரவாதத்தை ஒழிப்பது ரொம்ப சிரமம். தான்சாகத் தயாராகிவிட்ட ஒருவன் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றார் மிஸ்ரா.
இப்போது ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ படைப் பிரிவு வீரப்பனைப் பிடிக்கும் பணியில் இரு மாநில அதிரடிப் படைகளுக்கு உதவஅனுப்பப்பட்டுள்ளது. ஆனால், மாநில படைகளுக்குக் கீழ் செயல்பட சி.ஆர்.பி.எப். தயாராக இல்லை என்று தெரிகிறது. இதனால்அவர்கள் முழு அளவில் தேடுதல் வேட்டையில் இறங்கவில்லை.
-->
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications