கடத்தப்பட்ட "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" நிருபர் விடுதலை
பாட்னா:
பீகாரில் சமீபத்தில் கடத்தப்பட்ட "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" பத்திரிக்கையின் புகைப்பட நிருபர் அசோக் கார்னைக்கடத்தல்காரர்கள் விடுவித்து விட்டனர்.
நாலந்தா நகரின் அருகே பேலா என்ற கிராமத்தில் பணி நிமித்தமாக புகைப்படங்கள் எடுப்பதற்காகச்சென்றிருந்தார் அசோக். அந்தக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் தன் மனைவியுடன் அவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில் ஓரிரு நாட்களுக்கு முன் நள்ளிரவில் அசோக்கின் வீட்டுக்குள் புகுந்த சிலர் அவரை மட்டும் கடத்திச்சென்று விட்டனர்.
தாங்கள் கேட்கும் பணத்தைக் கொடுத்தால்தான் அவரை விடுவிப்போம் என்று அவருடைய மனைவியிடம்கூறிவிட்டு அசோக்கை இழுத்துச் சென்றனர். ஆனால் அதற்குப் பின்னர் கடத்தல்காரர்களிடமிருந்து எந்தவிதமானதகவலும் இல்லை.
அசோக்கை கண்டுபிடிப்பதற்காக போலீசார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர்.
இதற்கிடையே அசோக்கை மீட்க வேண்டும் என்று கோரி பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள்பீகார் முதல்வர் ராப்ரிதேவியின் வீட்டை நோக்கி பேரணிப் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் நேற்று மாலை கடத்தல்காரர்களிடமிருந்து அசோக் விடுவிக்கப்பட்டார். எந்தவிதமான நிபந்தனையும்இல்லாமல் அவரைக் கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.
ஒரு ஆற்றின் கரையோரத்தில் அசோக்கை விடுவித்த கடத்தல்காரர்கள், அருகிலிருந்த கரும்புக் காட்டுக்குள் ஓடிமறைந்தனர். தான் எந்த இடத்தில் இருக்கிறோம் என்று தெரியாமலேயே தட்டுத் தடுமாறி அருகிலுள்ள ஒருகிராமத்திற்கு வந்து சேர்ந்த அசோக், பின்னர் அங்கிருந்து வீடு திரும்பினார்.
அரசு கொடுத்த கடும் நெருக்கடியைத் தொடர்ந்தே கடத்தல்காரர்கள் தன்னை விடுவித்ததாக அசோக் பின்னர்நிருபர்களிடம் கூறினார். ராப்ரிதேவி மற்றும் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ் ஆகியோரையும் அசோக்சந்தித்தார்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications