வைகோ கைதை எதிர்த்து ஸ்டாலின் கையெழுத்து
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைக் கண்டித்து அக்கட்சிநடத்தி வரும் கையெழுத்து இயக்கம் படிவத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரான ஸ்டாலின் கையெழுத்துபோட்டார்.
வைகோவைக் கைது செய்த தமிழக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு கோடிகையெழுத்து வாங்கும் இயக்கத்தை மதிமுக தொடங்கியது.
திமுக தலைவர் கருணாநிதிதான் முதல் கையெழுத்தைப் போட்டு இந்த இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் கையெழுத்து வாங்கும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது.
ஓரிரு நாட்களுக்கு முன் தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரான இளங்கோவனும் கையெழுத்துப்போட்டார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியைக் கொன்ற விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து இளங்கோவன் கையெழுத்து போட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமியும் இதைக் கடுமையாகவிமர்சித்திருந்தார்.
ஆனால் வைகோ கைது செய்யப்பட்ட சம்பவத்தை ஆரம்பத்திலிருந்தே கண்டித்து வருவதாக இளங்கோவன்விளக்கமளித்தார்.
இந்நிலையில் இந்தக் கையெழுத்து இயக்கத்திற்கான படிவத்தில் ஸ்டாலினும் நேற்று கையெழுத்து போட்டார்.
மதிமுகவின் அவைத் தலைவரான எல். கணேசன் நேற்று சென்னை-வேளச்சேரியில் உள்ள ஸ்டாலினின் வீட்டுக்குச்சென்று, படிவத்தில் கையெழுத்துப் போடுமாறு கேட்டுக் கொண்டார்.
ஸ்டாலினும் உடனடியாக அந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு, அந்த இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்றுவாழ்த்தினார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications