ராணுவ தளபதி பத்மநாபன் நாளை ஓய்வு பெறுகிறார்
டெல்லி:
இந்திய ராணுவத்தின் தளபதி பதவியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் செளந்தரராஜன் பத்மநாபன் நாளைஓய்வு பெறுகிறார்.
முன்னதாக முப்படைகளின் கூட்டுத் தலைவர் பொறுப்பிலிருந்து இன்று ஓய்வு பெற்ற பத்மநாபன், அப்பொறுப்பைகடற்படைத் தளபதி மத்வேந்திர சிங்கிடம் ஒப்படைத்தார்.
சீனியாரிட்டி அடிப்படையில் இந்தப் பொறுப்பை முப்படைகளின் தளபதிகளும் மாறி மாறி வகித்து வருவார்கள்.அதன்படி நாளை ராணுவ தளபதி பதவியிலிருந்து பத்மனாபன் ஓய்வு பெறுவதையொட்டி, இப்பொறுப்பைமத்வேந்திர சிங் இன்று ஏற்றுக் கொண்டார்.
மத்வேந்திர சிங்கை விட விமானப் படைத் தளபதியான கிருஷ்ணசாமிதான் சீனியர் என்ற போதிலும், அவருக்குமுன்பாகவே கடற்படைத் தளபதியாக மத்வேந்திர சிங் பொறுப்பேற்று விட்டதால் அவருக்கே முப்படைத்தளபதிகளின் தலைவர் பொறுப்பு சென்று விட்டது.
இதற்கிடையே மத்வேந்திர சிங்கிடம் பொறுப்புக்களை ஒப்படைத்த பின்னர் பத்மனாபன் நிருபர்களிடம்பேசுகையில்,
இந்த ஆண்டுத் துவக்கத்தில் பாகிஸ்தானுடன் எப்படியும் போர் தொடங்கிவிடும் என்றுதான் எதிர்பார்த்தோம்.இந்திய ராணுவமும் அதற்குத் தயாராகவே இருந்தது.
எந்த நேரத்திலும் பாகிஸ்தானைத் தாக்க தயாராக இருந்தோம். ஆதே நேரத்தில் மத்திய அரசின் முடிவுக்காகவும்நாங்கள் காத்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இப்போதும் கூட காஷ்மீரில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில்தான் உள்ளனர்.
ஆனால் எங்களுடன் நேரடியாக மோதுவதற்கு அஞ்சும் பாகிஸ்தான் தீவிரவாதிகளோ அப்பாவிப்பொதுமக்களையும், பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்து தாக்கி வருகின்றனர் என்றார் பத்மனாபன்.
பத்மனாபன் நாளை ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் அடுத்த தளபதியாக ஜெனரல் நிர்மல்சந்த் விஜ் நாளை பொறுப்பேற்றுக் கொள்வார்.
-->
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications