புத்தாண்டுக் கொண்டாட்டம்: சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
சென்னை:
புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது வரம்பு மீறிச் செயல்படுபவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர் விஜயகுமார் எச்சரிக்கை விடுத்தார்.
இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
நாளை நள்ளிரவு புத்தாண்டு பிறக்கிறது. இதையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மெரீனா கடற்கரை, கடற்கரை சாலை, அண்ணா சாலை, கோயம்பேடு பஸ் நிலையம் ஆகிய முக்கியமானபகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே போலீசார் ரோந்து வந்து கொண்டுதான் உள்ளனர். ஆனால் நாளை இந்த ரோந்துப் பணிதீவிரப்படுத்தப்படும்.
தெரிந்தவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறி கை குலுக்கினால் தப்பில்லை. ஆனால் முன்பின் தெரியாதவர்களைவம்படியாகக் கையைப் பிடித்து குலுக்கி வாழ்த்து கூறுவது தவறு.
இதை அந்நபர்கள் விரும்பவில்லை என்றால், கை குலுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர வேறு வழிஇல்லை.
அதேபோல், ஈவ் டீசிங் செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்தவர்களின் உரிமைகளைப்பறிக்காத வகையில் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும்.
புத்தாண்டையொட்டி சில ஹோட்டல்களில் ஆபாசக் களியாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகஎங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவ்வாறு ஆபாச டான்ஸ் நிகழ்ச்சிகளை நடத்தினால் அந்த ஹோட்டல்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள்எடுக்கப்படும்.
மேலும் புத்தாண்டு உற்சாகத்தில் மது அருந்தி விட்டு சாலைகளில் பைக்குகளிலும் கார்களிலும் வேகமாகப் போகவிரும்பும் இளைஞர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன்.
குடித்து விட்டு வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
கடந்த சில ஆண்டுகளில் புத்தாண்டின்போது உற்சாக மிகுதியில் வேகமாக வாகனங்களைச் செலுத்தியதால் பலவிபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இந்த ஆண்டு அவ்வாறு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனஎன்றார் விஜயகுமார்.
-->
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications