கந்து வட்டி வசூலிப்பவர்களை ஒடுக்க விரைவில் சட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கந்து வட்டி வசூலிக்கும் ரவுடிகள், கூலிப்படையினர் மற்றும் கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களைக் கடுமையாகத்தண்டிப்பதற்கான சட்டம் தமிழகத்தில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கந்து வட்டி வசூலிக்கும் ரவுடிகள் பல்கிப் பெருகியுள்ளனர்.

அநியாய வட்டிக்குக் கடன் கொடுத்து ஏராளமான மக்களை நடுரோட்டுக்கு அனுப்பும் இந்த ரவுடிகள், கழுத்தில்மைனர் செயின்களுடனும் மோட்டார் சைக்கிள்களுடனும் பந்தாவாக பவனி வருவார்கள்.

இவர்களுக்கு வட்டிப் பணத்தை வசூல் செய்வதைத் தவிர வேறு வேலையே கிடையாது. ஏராளமான மக்கள்இவர்களிடம் மீட்டர் வட்டிக்குக் கடன் வாங்கி, அவர்கள் வட்டிப் பணத்தைக் கேட்டு வரும்போது கொடுக்கமுடியாமல் திணறுவார்கள்.

பல முறை அசலையும் வட்டி மீறும்போது இந்த அப்பாவி மக்களின் வீடுகளில் கந்து வட்டிக்காரர்கள் தம்கும்பலுடன் சாதாரணமாக நுழைந்து அங்கிருக்கும் பொருட்களை அள்ளிச் செல்வார்கள்.

இன்னும் சில மக்கள் கடனையும் வட்டியையும் செலுத்த முடியாமல் தங்கள் வீடுகளைப் பறிகொடுத்து விட்டு நடுத்தெருவுக்கு வந்த சம்பவங்களும் நடந்துள்ளன.

தமிழகத்திலேயே மதுரையில்தான் இதுபோன்ற கந்து வட்டிக்காரர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது.

இந்தக் கந்து வட்டிக்காரர்களை அடக்கி ஒடுக்குவதற்காகத் தமிழக அரசு விரைவில் ஒரு சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது.

இதற்கான சட்ட மசோதா கிட்டத்தட்ட தயாராகி விட்டதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் இந்த சட்ட மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, அடுத்த சட்டசபைக் கூட்டத் தொடரிலேயேநிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது.

கந்து வட்டி வசூல் செய்பவர்களை மட்டுமல்லாமல், ரவுடிகள், கூலிப்படையினர், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள்ஆகியோரையும் இந்தச் சட்டத்தின் மூலம் ஒடுக்க முடியும்.

இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை 30 நாட்கள் வரை போலீஸ் காவலில் வைக்கவும், குறைந்ததுஆறு மாதம் வரை சிறையில் வைக்கவும் முடியும்.

தற்போது அமலில் உள்ள பொடா சட்டத்தை விட இந்தச் சட்டம் கடுமையாக இருக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+