அதிமுக கூட்டணியிலிருந்து முஸ்லீம் லீக் வெளியேறியது
சென்னை:
அதிமுக கூட்டணியில் இருந்து வந்த இந்திய தேசிய லீக் கட்சி அக்கூட்டணியிலிருந்து வெளியேறி விட்டது.
கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டுபோட்டியிட்டது இந்திய தேசிய லீக்.
கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த வாணியம்பாடி இடைத் தேர்தலுக்கான சீட்டை தங்களுக்கே கொடுக்கவேண்டும் என்று அதிமுகவிடம் இந்திய தேசிய லீக் கோரியது
ஆனால் இந்தக் கோரிக்கையை அதிமுக காதில் போட்டுக் கொள்ளவில்லை. வாணியம்பாடி இடைத் தேர்தலில்அதிமுகவே போட்டியிட்டு வெற்றி பெற்றது.
அந்தச் சமயத்திலிருந்தே அதிமுகவுடனான உறவை இந்திய தேசிய லீக் சிறிது சிறிதாக நிறுத்திக் கொண்டது.
இதற்கிடையே கோவில் அன்னதானத் திட்டம், கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் போன்றவற்றை அறிமுகப்படுத்திபா.ஜ.கவைக் கவர ஆரம்பித்தது அதிமுக. இவையும் இந்திய தேசிய லீக் கட்சிக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கூட்டணியில் நிச்சயம் மாறுதல் இருக்கும் என்று பா.ஜ.கவின் தேசியப்பொதுச் செயலாளர் இல. கணேசனும் நிருபர்களை அழைத்து தெளிவாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் குஜராத் முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடியின் பதவியேற்புவிழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்றதும் இந்திய தேசிய லீக்கட்சியைப் பெரிதும் உசுப்பேற்றி விட்டது.
இதைத் தொடர்ந்து இனி அதிமுகவுடன் ஒட்டுமில்லை, உறவுமில்லை என்று கூட்டணியைத் துண்டித்துக் கொண்டதுஇந்திய தேசிய லீக்.
மேலும் சிறுபான்மை சமூகத்தினருக்காகக் குரல் எழுப்பும் காங்கிரஸ் கட்சிக்கே இனி ஆதரவளிப்போம் என்றும்சமீபத்தில் நடந்த இந்திய தேசிய லீக் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சாத்தான்குளத்தில் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் காங்கிரசை ஆதரிக்கப் போவதாகவும் அக்கட்சியின்தலைவர் அப்துல் காதர் கூறினார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications