மதிமுக-பா.ஜ.க. இடையே விரிசல் அதிகரிப்பு
சென்னை:
பொடா சட்டத்தின் சர்ச்சைக்குரிய பிரிவை நீக்க வேண்டும் என்று மதிமுக நடத்தி வரும் கையெழுத்து இயக்கபடிவத்தில் கையெழுத்திட பா.ஜ.க. பொதுச் செயலாளர் ராஜா மறுத்து விட்டார். இது மதிமுகவினரிடையே பெரும்அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொடா சட்டத்தின் 21வது பிரிவை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும் இந்தச் சட்டப் பிரிவை நீக்க வலியுறுத்தி ஒரு கோடிப் பேரிடம் கையெழுத்து வாங்கும் திட்டத்தை மதிமுகநடத்தி வருகிறது. ஒரு கோடிப் பேரிடம் கையெழுத்து வாங்கிய பின்னர் அந்தப் படிவத்தை ஜனாதிபதி டாக்டர்அப்துல் கலாம் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு அனுப்ப அந்தக் கட்சி முடிவு செய்துள்ளது.
இதற்கான படிவத்தில் திமுக தலைவர் கருணாநிதிதான் முதலில் கையெழுத்திட்டார். தமிழக காங்கிரஸ் செயல்தலைவர் இளங்கோவன், திமுக இளைஞரணிச் செயலாளர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இந்தப் படிவத்தில்கையெழுத்திட்டுள்ளனர்.
இந்நிலையில் ராஜாவிடம் சென்ற மதிமுக அவைத் தலைவர் எல். கணேசன், அந்தப் படிவத்தில் கையெழுத்துப்போடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அதில் கையெழுத்திட ராஜா மறுத்து விட்டார்.
இதனால் மதிமுக-பா.ஜ.க. உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக் (தே.ஜ.)கூட்டணி அரசில் மதிமுகவும் முக்கிய அங்கம் வகிக்கிறது. தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம் என்று கூறியதன்மூலம் வாஜ்பாயிடம் பெரும் நம்பிக்கையையும் வைகோ பெற்றிருந்தார்.
ஆனால் வைகோ கைது செய்யப்பட்ட பின்னர் அவரை மத்திய அரசு கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.பா.ஜ.க. தலைவரான வெங்கையா நாயுடு கூட பலமுறை யோசித்த பிறகே வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவைகோவைச் சந்தித்தார்.
வெங்கையாவைத் தவிர பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் தே.ஜ. கூட்டணியில் உள்ளதிமுகவின் தலைவர் கருணாநிதி ஆகியோர் மட்டும்தான் வைகோவை சிறையில் சந்தித்துள்ளனர்.
பா.ஜ.கவுடன் கூட்டணி சேருவதற்காக அதிமுக முழு வேகத்தில் தயாராகி வருவதாகக் கருதப்படும் இந்தச்சூழ்நிலையில், மதிமுகவை பா.ஜ.க. தொடர்ந்து புறக்கணித்து வருவதால் இரு கட்சிகளுக்குமிடையே விரிசல்அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கையெழுத்து இயக்கப் படிவத்தில் ராஜா கையெழுத்துப் போடாதது குறித்து வைகோவும் இன்று தன்னுடையஅதிருப்தியை வெளியிட்டார்.
சென்னையில் உள்ள பொடா நீதிமன்றத்தில் தன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர்நிருபர்களிடம் பேசுகையில் இது குறித்த அதிருப்தியை வெளியிட்டார் வைகோ.
அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தே.ஜ. கூட்டணியில் பல மாற்றங்கள் ஏற்படலாம் என்று பா.ஜ.கவின்தேசியப் பொதுச் செயலாளரான இல. கணேசன் சமீபத்தில் கூறியது தொடர்பாக நிருபர்கள் கேட்டபோது, அதற்குப்பதிலளிக்க வைகோ மறுத்து விட்டார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications